News Update :

Tuesday, March 7, 2017

TamilLetter

அபூர்வமான கொம்பன் யானை கொலை -உலகம் முழுவதும் சோகம்


மிக அபூர்வமான யானைக் கூட்டத்தைச் சேர்ந்த 'மகா கொம்பன்' என்றழைக்கப்படும் 50 வயது யானையை தந்தங்களுக்காக கடத்தல்காரர்கள் கொன்று விட்டதாக வெளிவந்த தகவல் கென்யா மக்களுக்கு மட்டுமின்றி, உலகளாவிய விலங்கியல் ஆர்வலர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவில் மிக நீளமான யானைத் தந்தங்களைக் கொண்ட யானைகள் இனம் உண்டு. இந்த இனம், கிட்டத்தட்ட அழிந்து விட்டது. மொத்தமாக, ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே தற்போது 30 யானைகள் மட்டுமே உள்ளன. 
மிக நீளமான கொம்புத் தந்தங்களைக் கொண்டவை இவை. இவற்றில் மக்களுக்கு அறிமுகாமான 'மகா கொம்பன்' என்று ஆப்பிரிக்கர்களால் அழைக்கப்பட்டு வந்த சாட்டாவ் -2 என்ற யானை கொல்லப்பட்டது. இதற்கு எதிராக விஷ ஊசித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதன் நீளமான, கம்பீரமான தந்தங்கள் அகற்றப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்காவிலேயே மிக வயதான சாட்டவ்-2 என்ற மகா கொம்பன் கொல்லப்பட்டு விட்ட தகவல் கென்யா ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகி இருப்பது அந்நாட்டு மக்களுக்கிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிரது.
கடந்த 2014-ஆம் ஆண்டில் மற்றொரு நீண்ட தந்தங்கள் கொண்ட பிரபல யானை கொல்லப்பட்டு அதன் தந்தங்கள் களவாடப்பட்டன. அதன் பின்னர் அந்த யானையின் நினைவான மகா கொம்பன் என்ற அடைமொழியோடு வலம் வந்த இந்த யானைக்கு சாட்டாவ்-2 எனப் பெயரிடப்பட்டது.
இதற்கு முன்பும் சில முறை கடத்தல்காரர்களின் தாக்குதல்களில் இருந்து இந்த மகா கொம்பன் தப்பியுள்ளான். எனவே, 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட கென்யாவின் தேசிய வனப் பூங்காவில் அதன் நடமாட்டம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிர்த்து வந்தனர் என்றாலும் இப்பகுதிக்குள் செயல்பட்டு வரும் கடத்தல்காரர்கள் இந்தக் கொலை, யாருக்கும் தெரியாமல் அரங்கேற்றி விட்டனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-