ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கட்சியின் யாப்பு விவகார செயலாளர் எம்.ஏ.அன்ஸிலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் எதிர்வரும் 28ம் திகதி கட்சியின் தலைமையகமான தாறுஸலாத்தில் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ் உயர்பீட கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கு கட்சியின் செயலாளர் மன்சுர் ஏ.காதரினால் எழுத்து மூலம் அழைப்பு விடு்க்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் கட்சியின் முன்னாள உயர்பீட உறுப்பினர்களான எம்.ரீ.ஹஸனலி,நிந்தவுர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.தாஹீர்,நற்பிட்டிமுனை தௌபீக் ஆகியோருக்கு கட்சியின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்படாமல் புறக்கனிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
28ம் திகதி நடைபெறவுள்ள உயர்பீடக் கூட்டத்தில் தாங்கள் கலந்து கொள்வீர்களா? என தமிழ் லெட்டர் செய்திச் சேவை சட்டத்தரணி அன்ஸிலிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இதுவரை கலந்து கொள்வது தொடர்பாக இன்னும் தீர்மானம் எடுக்கவில்லையென பதிலளித்தார்.