News Update :

Monday, March 20, 2017

TamilLetter

உதுமாலெப்பைக்கு தோல்விப் பயம் பிடித்து விட்டது



சஹீர் - கட்டாரிலிருந்து

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் தற்போதைய ஒரே கோஷம் முஸ்லிம் கூட்டமைப்பு.பதவியில் இருக்கும் போது மக்களைத் தேடாதவர்கள் தோல்வியடைந்து வீட்டில்  இருக்கும் போது மட்டும் பல திட்டங்களை அறிவிக்கின்றனர்.

இவர்கள் அறிவிக்கும் எந்த திட்டமாவது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்குமா என்று பார்த்தால் அடுத்த தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பதற்கான திட்டமாகவே அது உள்ளது.

கரையோர மாவட்டத்தை ஒன்று சேர்ந்து பெறுவோம் என்கின்றார்களா?தென் கிழக்கு அலகைப் பெற கூட்டமைப்பு அமைப்போமா என்று கேட்கின்றார்களா?அல்லது இழந்த காணியை மீட்டெடுக்க ஆர்ப்பாட்டம் நடாத்த ஒன்று சேருவோமா?அல்லது சுனாமி வீடுகளை மக்களிடம் பெற்றுக் கொடுக்க எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திப்போமா?அல்லது ஒலுவில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஒன்று சோ்ந்து பேசுவோமா? என எந்த திட்டத்தை முன் வைத்து கூட்டமைப்பு அமைக்கவுள்ளனர்.

முஸ்லிம் மக்கள் தற்போது எதிர் நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு  கட்சிகளு்க்கிடையில்   கூட்டமைப்பு அமைக்க வேண்டிய தேவையில்லை.அப் பிரச்சினைகளை ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தாலே போதும்.

ஆனால் நீங்கள் அமைக்கும் கூட்டமைப்பு எப்படி தேர்தலில் வெற்றி பெறுவது என்பதற்கான ஆலோசனை சபையாகும்.ஹஸனலி முஸ்லிம் காங்கிரஸில் இருந்து கொண்டு கரையோர மாவட்டம் தேவையென்றால் நீங்கள் தேவையில்லை என்றீர்கள் ஹஸனலி கட்சியை விட்டு வெளியில் வந்து இதைக் கூறினால் ஹஸனலி நியாயம் எனக் கூறுகின்றீர்கள் இதுதான் நீங்கள் செய்யும்  அரசியல்

இன்று உங்களுக்கு அதிகாரம் தேவைப்படுகின்றது அதற்காக தலைவர்கள் ஒன்று சோ்வோம் என அழைப்பு விடுக்கின்றீர்கள்.நீங்கள் முன்பு சொன்னதை இப்போ மறந்து விட்டீர்கள்.எதற்காக இந்த நாடகம்.

மக்கள் மைத்திரியை ஆதரிக்கும் போது நீங்கள் மஹிந்தவுக்காக நியாயம் பேசினீர்கள் மஹிந்தவை வெற்றி பெற வைக்க எவ்வளவு சதித் திட்டங்களை அரங்கேற்றினீர்கள்.இதெல்லாம் எதற்காக என்று மக்களுக்கு புரியாதா?

இன்னும் சில மாதங்களில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காகவே முஸ்லிம் கூட்டமைப்பு பற்றி உதமாலெப்பையும் அதாஉல்லாவும் பேசிகின்றனர்.அத்தோடு ஹஸனலி தரப்பினரையும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர்.

ஹஸனலி 16 வருடங்களுக்கு முன்பாகவே கூறிவிட்டார் அதாஉல்லா முஸ்லிம்  சமூகத்தின் சாபக்கேடு  என்று

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-