News Update :

Wednesday, March 22, 2017

TamilLetter

கோழி முட்டைக்குள் வைரக்கல்!


சாப்பிடுவதற்கு வைத்திருந்த முட்டையில் வைரம் இருந்ததைக் கண்டு லண்டனில் உள்ள சால்லி தோம்சன் என்ற பெண்மணி அதிர்ச்சி அடைந்தார் அடுத்த மாதம் அவருக்குத் திருமணம் நடக்கவிருப்பதால் இது கடவுள் அவருக்குத் தந்தப் பரிசு என்று அவர் நம்புகிறார்.
‘அடுத்த மாதம் எனக்குத் திருமணம் நடக்கவிருக்கிறது. இதற்காக நான் உடல் எடையைக் குறைக்க தினமும் அவித்த முட்டை சாப்பிடுகிறேன். அதேபோல் சாப்பிட்டுகொண்டிருக்கும்போது ஏதோ ஒன்று கடினமான பொருள் என் வாயில் பட்டதை உணர்ந்து நான் அதை வெளியில் துப்பிவிட்டேன். அதில் பளபளவென்று ஒரு சிறிய கல் மின்னியது. சுத்தம் செய்து பார்த்தால் அது ஒரு வைரக்கல். எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது’ என்று அவர் கூறினார். 
‘எனக்கு கடவுள் பக்தி அதிகம். இதை நான் கடவுள் எனக்கு தந்த பரிசாகவும் ஆசிர்வாதமாகவும் நம்புகிறேன். இதனால் எனக்கு இன்னும் பல நன்மைகள் விளையும் என்பது உறுதி’ என்று அவர் மேலும் உற்சாகமாக கூறினார்.
கீழே விழுந்து கிடந்த அந்த வைரத்தை பண்ணையில் கோழி விழுங்கியிருக்க கூடும். அந்த வைரம் அதனுடைய முட்டையில் கலந்து வெளியேறிருக்கக் கூடும் என்று கோழிப் பண்ணையில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட சால்லி மேலும் கூறினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-