News Update :

Monday, March 27, 2017

TamilLetter

அந் -நுார் சாதனை மாணவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பாராட்டு



கல்வியால் அறிவைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது ஒரு சமூகத்தில் தோன்றுகின்றதோ அப்போதே அச் சமூகம் தன்னிறைவு அடைந்விட்டதாக கருத முடியும் அந்த வகையில்  . அறிவாலும்,
ஆற்றலாலும் பண்பட்ட ஒரு சமுதாயமாக அட்டாளைச்சேனை கோணத்தை இன்று பரிமாணம் பெற்றுள்ளதையிட்டு நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

அந்-நுார் மகா வித்தியாலயம்  க.பொ.த.சா/தரம் பரீட்சையில்  வரலாற்று சாதனையை இன்று எட்டியுள்ளது.பரிட்சைக்கு   தோற்றின அணைத்து மாணவர்களும்   சித்தியடைந்துள்ளனர்.இது சாதாரண ஒரு விடயமாக பார்க்க முடியாது.இச் சாதனைக்கு பின்னால் பலரின் தியாகங்கள்  மறைந்து கிட்க்கின்றன.அவர்களுக்கும் மனப்புர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்

இச் சாதனையை  ஏற்படுத்தி தமது சமூகத்திற்கும்  தனது சொந்த மண்ணுக்கும் பெருமை தேடித்தந்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும்  எனது  பாராட்டுக்கள்.

வாழ்க்கையின் முதற்படியில் வெற்றியை தொட்டுள்ளீர்கள்  அது தொடர்ச்சியான  உங்கள் வெற்றிப் பயணத்திற்கு பெரும் மாற்றத்தை தரும் -அல்ஹம்துலில்லாஹ்

நன்றி-
ஏ.எல்.தவம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலை வாய்ப்பு செயலாளரும,கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-