சேற்று நிலத்துக்குள் சிக்கி உயிருக்காக போராடிய யானை ஒன்று, அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்களின் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் காப்பாற்றப்பட்ட சம்பவம் தென்னிந்தியாவின் கர்நாடக பகுதியில் பதிவாகியுள்ளது.
கர்நாடக பகுதியில் நேற்றிரவு உணவு தேடி வந்த யானை ஒன்று சேற்று நிலத்துக்குள் சிக்கி கீழே விழுந்துள்ளது. இரவு முழுதும் சேற்றினுள் இருந்த யானை உயிருக்காக போராடியுள்ளது.
இதனை அவதானித்த பிரதேசவாசிகள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெக்கோ இயந்தியம், வாகனங்கள் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் யானையை காப்பாற்றியுள்ளனர்.
சம்பவத்தில் யானை காயமடைந்தமையால் பல மணிநேரம் அதனால் எழும்பி நடக்க முடியாத நிலை காணப்பட்டுள்ளது.
பின்னர் யானைக்கு தேவை மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதையடுத்து யானை எழுந்து வனத்தை நோக்கி சென்றுள்ளது.

