இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அமைந்துள்ளதாகக் கருதப்படும் ஆதாம் பாலம் இயற்கையாக தோன்றிய ஒன்றல்ல, மாறாக, அது செயற்கையாக உருவாக்கப்பட்டதே என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளிக் கழகமான நாசாவுடன் இணைந்து இந்திய வல்லுனர்கள் நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இராமாயணக் காலத்தில் இராமருக்கும் இராவணனுக்கும் இடையே நடந்த போரின்போது வானரப் படைகள் இலங்கைக்குச் செல்வதற்காக இந்தப் பாலம் அமைக்கப்பட்டது எனக் கூறப்படும் இது 'இராமர் பாலம்' என்றும் அடையாளப் படுத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பாலம் இயற்கையாக தோன்றியதல்ல. மனிதர்களால் கட்டப்பட்டது. மிகப் பழமை வாய்ந்ததாக உள்ளது. குறைந்தபட்சம் சில லட்சம் ஆண்டுகளைத் தாண்டியதாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் தங்களின் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 18 கிலோ மீட்டர் ஆதாம் பாலத்தின் ஊடாக இரண்டு நாடுகளும் தொடர்பு பட்டிருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கையில் இருந்து சீதையை மீட்பதற்காக தமக்கு உதவிய வானரங்கள் (குரங்குகள்) மூலம் இராமர் இந்தப் பாலத்தைக் கட்டினார் என்பதால் 'சேது பந்தனம்' என்ற பெயரில் இராமாயணத்தில் சுட்டிக்காட்டப்படுள்ளது.
சுண்ணாம்புப் பாறைப் படவங்களை அகற்றிவிட்டு தமிழ்நாட்டின் தென் கிழக்குக் கடற்கரையில் உள்ள பாம்பன் தீவு மற்றும் இலங்கையின் வட பகுதியிலுள்ள மன்னார் தீவுக்கு இடையே இந்த ஆதாம் பாலம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இப்படியொரு பாலம் இருந்ததையும் அதில் இரு பக்கமும் மக்கள் நடந்து சென்று வந்ததையும் இந்தப் புவியியல் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
இப்போது இந்த இருநாடுகளையும் பிரிக்கும் கடல் பகுதி சேது சமுத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பான ஆய்வில் இது இயற்கையானது அல்ல என்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் இப்போது நிபுணர்கள் தெளிவு படுத்துகின்றனர்.