News Update :

Monday, March 6, 2017

TamilLetter

கனத்த உணர்வுகளை ஏற்படுத்திய உலக புகழ்பெற்ற பூனையின் இறுதி சடங்கு! -



எடை குறைப்பு பயணத்தினால் சர்வதேச கவனத்தை திரட்டிய பூனையின் மரண இறுதிசடங்கு  குடும்ப அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் விசிறிகளின் கனத்த உணர்வுகளுடன் சனிக்கிழமை நியு பிறவுன்ஸ்விக்கில் இடம்பெற்றது.

ரைனி எனப்படும் இந்த பூனை திடீரென நியு பிறவுன்ஸ்விக்கில் உள்ளஅதனது வளர்ப்பு வீட்டில் பிப்ரவரி இறுதியில் இறந்து விட்டது.

கண்ணீருடன் கூடிய “வாழ்க்கை கொண்டாட்டம்” சடங்கு அதனை கௌரவிக்க சனிக்கிழமை நடாத்தப்பட்டது.
பூக்கள், படங்கள் மற்றும் எண்ணற்ற இரங்கல் செய்திகளுடன் இடம்பெற்றது.
2011ல் மர்மனான முறையில் ரைனி SPCAகாரியாலயத்திற்கு வந்து சேர்ந்தது. காட்போட் பெட்டி ஒன்றிற்குள் வைத்து ரேப்பினால் மூடப்பட் நிலையில் வந்தடைந்தது.

கிட்டத்தட்ட 14கிலோகிராம் எடையுடன் காணப்பட்டது. சாதாரண பூனை ஒன்றின் எடையின் மூன்று மடங்கு எடையை கொண்டிருந்தது.

அதிக புரத உணவு பழக்கத்தினால் இதன் எடை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு வருடத்தில் எடையின் அரைப்பங்கு குறைவடைந்ததென கூறப்படுகின்றது.
இதன் எடை மற்றும் எடை குறைப்பு முயற்சிகளால் சர்வதேச அளவிலான கவனத்தை ரைனி ஈர்த்தது.

2014ல் நியு பிறவுன்ஸ்விக் சட்டமன்றம் Fredericton SPCA யின்  100வது ஆண்டு நிறைவில் இந்த முன்னாள் கொழுத்த பூனையை கௌரவித்தது. ரைனியின் கதையை சட்டசபை அமைச்சர் டானி சோசி சட்ட மன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

ரைனியின் எடை இழப்பு கதை கிட்டத்தட்ட 50,000டொலர்களை சேர்த்து கொடுத்தது.
ரைனியின் திடீர் மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
catcat1cat2cat3cat4

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-