றியால்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து பஷீர் சேகு தாவுத் நீக்கப்பட்டதிலிருந்து நீண்ட நாட்களாக வெற்றிடமாகயிருந்த தவிசாளர் பதவியை யாருக்காவது வழங்க வேண்டுமென உயர்பீட உறுப்பினர்கள் தலைவருக்கு கோரிக்கை விடுத்தனர்
இதன் அடிப்படையில் சில தினங்களுக்கு முன்பு நடந்தேறிய முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் இரண்டு முக்கியமான விடயங்கள் நடந்தேறியது.
கட்சியின் உயர்பீடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதுடன் இன்னுமொறுவருக்கு பதவி பறிக்கப்பட்ட சுவாரிசமான நிகழ்வாக அது அமைந்தது.
கட்சியின் இரண்டாம் நிலை பதவியாக தவிசாளர் பதவியுள்ளதால் யாரை நியமிப்பது என உயர்பீடத்தில் ஒரு சலசலப்பு.இப்பதவியை அடைய வேண்டுமென கட்சிக்குள்ளையும்,வெளியிலும் பல பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது பேசிய தலைவர் இன்று புதிய தவிசாளர் ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளதால் உயர்பீடம் அந் நபரை தெரிவு செய்யுங்கள் என சபையிடம் கோரிக்கை விடுத்தார்.
சபை தீர்மானம் எடுப்பதில் தாமதம் ஏற்பட்ட போது மீண்டும் தலைவர் ஒரு ஆலோசனையொன்றை முன்வைத்தார்.நான்காம் நிலைத் தவைர்கள் மூன்றாம் நிலைக்கும் மூன்றாம் நிலைத் தலைவர்கள் இரண்டாம் நிலைக்கும் தெரிவு செய்வது சிறந்ததென கூறினார்.அப்படி தெரிவு செய்வதன் மூலம் பிரதித் தலைவராக இருக்கும் முழக்கம் மஜீத் கட்சியின் தவிசாளராக நியமிக்கப்படுவார்
இதை நன்கு புரிந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத் தலைவர் சொல்வதை
ஏற்க முடியாது என ஆக்ரோசத்துடன் பதிலளித்தார்.
அப் பதிலின் மூலம் மீண்டும் அப் பதவி அவருக்கே போக வேண்டுமென்ற ஜவாத்தின் நோக்கத்தையும் அவரின் பின்னணியையும்
சரியாக புரிந்து கொண்ட தலைவர்
மாகாண சபை உறுப்பினர் ஜவாத்தைப் பார்த்து நான் கட்சியின் புதிய தவிசாளராக முழக்கம் மஜீத்தை பிரேரிக்கிறேன் சபையின் முடிவு என்ன என்று கேட்டார். ஜவாத்தின் கருத்தை நிராகரித்த உயர்பீடம் தலைவர் முன்வைத்த பிரேரணையை ஏகமானதாக ஏற்றுக் கொண்டது.
ஜவாத்தின் காய்நகர்த்தல் பிழைத்துப் போனதால் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தினார் ஜவாத்.கல்முனையில் நடைபெறவிருக்கும் கூட்டம் தொடர்பாக என்னோடு பேசவில்லையென கூறினார்.
இதற்குப் பதிலளித்த பிரதியமைச்சர் கட்சியின் கண்டித் தீர்மானத்திற்கு அமைவாகவே இக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் பதவி அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை அழைப்பிதழ்கள் மற்றும் பெனர்களில் பொறித்துள்ளதாகவும் என கூறினார்.ஜவாத் மீண்டும் எதோ பேசத் தொடங்கினார்.ஜவாத்தின் பேச்சை ஹரீஸ் அலட்சியம் செய்தார்.
இதன் போது குறிக்கிட்ட தலைவர் கல்முனையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஜவாத்திற்கு அழைப்பு விடுத்தார்.
நான் கூட்டத்தில கலந்து கொள்ள முடியாது என ஜவாத் தலைவரிடம் கூறினார்.
தலைவர் வரும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென தலைவர் கூறினார்.
அப்படி நான் கலந்து கொள்வதாயின் பிரதியமைச்சர் ஹரிசைப்பற்றிய உண்மைகளைக்
கூறுவேன் என்றார்.
பிரச்சினையில்லை யாரைப்பற்றி கூறினாலும் எனக்கு ஒன்றுமில்லையென பதிலளித்தார் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம்