News Update :

Sunday, March 5, 2017

TamilLetter

மிகவும் குறைந்த நேரமே உறங்கும் காட்டு யானைகள்- ஆய்வுத் தகவல்



ஆப்பிரிக்க காட்டு யானைகள் மிகக் குறுகிய காலநேரம் மட்டும் கண்ணுறங்கும் பாலுட்டி இனம் என்று புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
நிலத்தில் வாழும் உலகின் மிகப் பெரிய விலங்கினமான யானைகளின் உறக்கம் பற்றிய ஆய்வொன்றில் மேற்கொண்டிருக்கும் வனவிலங்கு விஞ்ஞானிகள் அவை நாளொன்றுக்கு சராசரியாக இரண்டு மணி நேரங்களே உறங்குவதாகவும் சில தினங்கள் உறக்கம் கொள்வதில்லை என்றும் கண்டறிந்துள்ளனர்.
போட்ஸ்வானா நாட்டு சொபோ தேசிய பூங்காவில் உள்ள இரு பெண் யானைகளை ஆய்வாளரகள் 35 நாட்கள் துல்லியமாக கண்காணித்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர். அப்போது கைக்கடிகாரம் அளவான சாதனம் ஒன்று பாதகமற்ற முறையில் தோலின் கீழ் பொருத்தப்பட்டு  கவனிக்கப்பட்டு வந்துள்ளது.
யானைகள், சிங்கம் அல்லது மனித அச்சுறுத்தலை தவிர்க்க சில வேளைகளில் 48 மணி நேரங்கள் உறக்கம் இன்றி சுமார் 30 கிலோமீட்டர்கள் தூரம் நடக்கின்றன. அடுத்து, வளர்க்கப்படும் குதிரைகளே மிக குறுகிய காலம் உறங்குவதாக நம்பப்படுகிறது. அவை நாளொன்றுக்கு மூன்று மணி நேரமே உறங்குகின்றன எனஆய்வுகள் கருத்துரைக்கின்றன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-