News Update :

Sunday, March 5, 2017

TamilLetter

அதாஉல்லா,ஹஸனலியை விட எவ்வளவோ மேல் ரவூப் ஹக்கீம் - தொலைபேசியில் சேகு இஸ்ஸதீன்


குல்ஸான் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் ஹஸன் அலி கட்சியின் தவைர் ரவூப் ஹக்கீமை விட்டு பிரிந்து வந்தது சுயநலத்திற்காகவே தவிர வேறு எதற்காகவும் அல்ல என சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.

நேற்றிரவு தொலைக்காட்சி செவ்வியில் கலந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகியவர்கள் தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.

இருந்த போதும் அவர் முழுமையாக இது தொடர்பாக விபரிக்காத போதும் இன்று காலை அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை எமது செய்திச் சேவை கேட்டறிந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரப்பிற்கு பிறகு பல சவால்களை சந்தித்து வந்துள்ளது இதற்கு முக்கியமான காரணங்கள் பதவி பட்டங்கள் தொடர்பாகவே   அவை நடந்தேறியுள்ளன.

. நான் அஷ்ரபோடு முரண்பட்டு  பிரிந்தது பதவிகளை எடுக்கக் கூடாது என்பதற்காக ஆனால் இன்று அமைச்சுப் பதவிகளுக்காகவே கட்சியை விட்டு சிலர் பிரிந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தனக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சை ரவூப் ஹக்கீம் வழங்கவில்லை என்பதற்காக பிரிந்தார்.இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக கிழக்கை பிரிக்க வேண்டுமென்று கத்தி விட்டு தூங்கிவிடுவார்..நீதிமன்றம் சென்று கிழக்கை பிரித்த அந்த மூன்று நபர்களும் இன்றும் கூட உயிரோடு இருக்கும் போதே தான் பிரித்ததாக அதாஉல்லா கூறுகிறார்.

வடக்கு மாகாணத்தின் பிரச்சினைகள் ஆயிரமாயிரம் இருக்கின்றன.அதற்கு தீர்வு காண்பதற்கே இன்னும் நுறு வருடங்கள் தேவைப்படுகின்றது. அதற்குள் கிழக்கைப்பற்றி பேசுவது ரிஷாட்டிற்கு தேவையற்றது

ஹஸனலி பஷீர் ஆகியோர் சமூகப் பிரச்சினை தொர்பாகவா பிரிந்தார்கள்? தேசியப்பட்டியாலும் செயலாளர் பதவிக்காகவும்தானே ; இன்று பிரச்சார கூட்டங்களை நடாத்துகின்றார்கள்.

எனவே நான் குறிப்பிட்ட இவர்களை விட ஹக்கீம் எவ்வளவோ மேல் என்றார் சேகு இஸ்ஸதீன்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-