ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் எம்.ரீ.ஹஸனலிக்கு எதிராக தான் செயற்படப் போவதாக ஹஸனலியின் சகோதரர் ஜப்பார் அலி தெரிவித்துள்ளார்.
எனது சகோதரர் ஹஸனலி முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு எதிராக அண்மைக் காலமாக கூறிவரும் குற்றச் சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லையென அவர் மறுத்துள்ளார்.
எனது சகோதரனை கட்சிக்கு எதிரானவர்கள் பயன்படுத்த முனைகின்றனர்.அம் முயற்சி ஒரு போதும் வெற்றியளிக்கப் போவதில்லை எனவும் சூழுரைத்தார்
நேற்றிரவு நிந்தவூர்; பெரிய பள்ளிவாசலில் ஒரு சிலர் கூடி சில தீர்மானங்களை மேற்கொண்டதாகவும் எதிர்வரும் வெள்ளிக் கிழமை நிந்தவூர் பிரதான வீதியில் கட்சியின தலைவருக்கு எதிராக ஒரு பிரச்சாரக் கூட்டத்தை நடாத்துவதாகவும் அறிய முடிகிறது.
எனது சகோதரர் அப்படியொரு கூட்டத்தில் கலந்து கொள்வாராயின் அடுத்த நாள் சனிக்கிழமை அதே பிரதான வீதியில் எனது தலைமையில் முஸ்லிம் காங்கிரஸின் கூட்டம் நடைபெரும் என்றார்.
இதே வேளை கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை ஜப்பார் அலி இன்று காலை சந்தித்து தனது சகோரர் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
அத்தோடு சனி;க்கிழமை நிந்தவூரில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் கட்சியின் தலைமை அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென்று கோரிக்கையும் விடுத்தார்.தலைவர் எவ்வளவோ மறுத்தும் ஜப்பார் அலி இணங்கவில்லை இதன் காரணமாக ஜப்பார் அலியின் தலைமையில் சனிக்கிழமை நிந்தவூரில் நடைபெரும் கூட்டத்திற்கு தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்ததாக அறிய முடிகிறது.
இக் கூட்டத்தில் பிரதியமைச்சர் பைஸல் காசீம் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும்,மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜப்பார் அலியின் இவ் நடவடிக்கையினால் ஹஸனலியை இயக்கும் குழுக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக அறியமுடிகிறது..