ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸனலி தனது அரசியில் பிரவேசத்தின் பின் பல்வேறுபட்ட பதவிகள் அவருக்கு வழங்கப்பட்டுவந்துள்ளன.
பெருந் தலைவர் அஷ்ரபின் மறைவுக்குப்பின் கட்சியின் செயலாளர் பதவி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்,பிரதியமைச்சர்,இராஜாங்க அமைச்சர் எனும் பதவிகளை அலங்கரித்துள்ளார்.
கட்சி நடவடிக்கையிலும் சரி தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி முக்கியமான தீர்மானங்களை அவரின் மனைவியே மேற்கொள்வதாகவும் மனைவியால் எடுக்கப்படும் தீர்மானத்தை அவர் அறிவிக்கும் ஒரு நபராகவே இதுவரை காலமும் செயற்பட்டு வந்துள்ளார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக கட்சியின் தலைமைக்கும் இடையில் ஏற்பட்டுவரும் முரண்பாடுகளை தீர்க்கும் பொருட்டு கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஹஸனலியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
சென்ற உறுப்பினர்கள் கட்சியுடன் மீண்டும் இணைந்து செயற்படுமாறு ஹஸனலியிடம் கோரிக்கை விடுது்தனர்.இதற்கு ஹஸனலி மௌனமாக இருந்த போதும் அவரின் மனைவி தலைவர் ரவுப் ஹக்கிமுக்கு கடும் சொற் பிரயோகங்களை பிரயோகித்து திட்டித்தீா்த்ததாக சென்ற முக்கியஸ்தர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த அம்பாரை மாவட்டத்தில் அதிகாரமுள்ள ஒரு நபர் ஹஸனலி காக்காவிடம் தேசியப்பட்டியல் தொடர்பாக கதைக்க வேண்டிய அவசியமில்லை அவரின் மனைவியிடம் பேசினால்தான் நமது பிரச்சினைக்கு தீர்வு எட்டும் என சம்மந்தப்பட்டவர்களிடம் நக்கலாக பதிலளித்தார்
அத்தோடு அவரின் மனைவி சம்மதித்தால் ஹஸனலியை நம்பி சென்றவர்களின் நிலைப்பாடு எப்படியிருக்கும் என்றார்.