சுமார் 15 வருடங்களுக்கு மேலாக உச்ச அரசியில் அதிகாரங்களில் இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மற்றும் மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை ஆகியோரின் சமூக துரோக அரசியலுக்கு சமாதிகட்டியது நானும் தவமும்தான் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸிருக்குமடையிலான கலந்துரையாடல் அக்கரைப்பற்றில் நேற்றிரவு(25) இடம்பெற்றது இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் நஸீர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மீண்டும் அதிகாரத்தை பெற வேண்டுமென்பதற்காக முஸ்லிம் கூட்டமைப்பு பற்றி பேசுகின்றார்.
அதாஉல்லா பேசும் விடயங்களை ஒரு போதும் மக்கள் நம்பத்தயாரில்லை.போதும் ஹஸனலியும் அன்ஸிலும் அவர்களுக்கு காற்றடித்து உயிரை் கொடுக்க முனைகின்றனர்.
எத்தனையோ சவால்களை முறியடித்த எங்களுக்கு ஹஸனலியும் அன்ஸிலும் செய்யும் நாடகங்கள் ஒரு போதும் சவலாக இருக்கப் போவதில்லை.
இன்று அட்டாளைச்சேனையில் குழப்பங்களை ஏற்படுத்த சதிகள் அரங்கேரிக் கொண்டிருக்கின்றன.அவர்களை நான் விட்டு வைத்துள்ளேன்இரவோடு இரவாக அப் பிரச்சனைகளுக்கு முடிவுகட்டுவேன்
நண்பர் தவத்தையும் என்னையும் யாரும் பிரிக்க முடியாது.என்னுடைய அரசியலில் தவமும் தவத்தினுடைய அரசியலி்ல் நானும் கலந்துள்ளேன்.மிக விரைவில் நான் பாராளுமன்ற உறுப்பினராக செல்லவுள்ளேன்.தவம் மாகாண அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.இதன் மூலம் அரசியலில் பெரும் மாற்றங்கள் அம்பாரை மாவட்டம் எங்கும் நிகழப் போகின்றது எனது அமைச்சர் மேலும் தெரிவித்தார்.