எஸ்.எம்.நிலாமுதீன்
இலங்கையின் கல்வித் தரத்தில் மிகவும் உன்னதமாக பேசப்பட்டு வந்த அக்கரைப்பற்றின் கல்வி சேகு இஸ்ஸதீன்,அதாஉல்லா போன்றோரின் அரசியல் கலாச்சாரத்தால் சின்னபின்னமாக்கப்பட்ட நிலையிலே பல வருடங்களை கடக்க வேண்டி ஏற்பட்டது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதாஉல்லா அரசியல் அதிகாரத்தில் இருந்த சமயம் பள்ளிக்கூடங்கள்,பள்ளிவாசல்கள்,அரச திணைக்களங்கள் எல்லாம் அரசியல் ரீதியாக செயற்பட்டதுடன் தகுதி தராதரங்களுக்கு அப்பால் தனது ஆட்களை அதன் நிருவாகியாக நியமித்திருந்தார்.
நிறுவன பொறுப்பாளர்கள் அமைச்சர் அதாஉல்லாவை திருப்திப்படுத்தும்
செயற்திட்டங்களிலே கூடுதலான கவனத்தை செலுத்தினார்கள்.
2015ம் ஆண்டு ஜனவரி 08ம் திகதிக்கு பிற்பாடு நாட்டின் தலையெழுத்து மட்டுமல்ல அக்கரைப்பற்றின் தலையெழுத்தும் மாற்றப்பட்டன.
இன்று புதிய அரசியல் தலைமைத்துவம் மாற்றப்பட்ட போது புதிய சிந்தனைகளும் வீறுகொண்டு எழுந்துள்ளது.
பல வருடகாலமாக எதை இழந்தமோ இன்று அச் சாதனையை எமது மாணவச் செல்வங்கள் ஏற்படுத்தி தந்துள்ளார்கள்.
இதற்கு பிரதான காரணம் பாடசாலைகளை சுயமாக இயங்குவதற்கான வழியை மாகாண சபை உறுப்பினர் தவம் ஏற்படுத்தியுள்ளார்
பாடசாலைக்கு தேவையான பௌதீக வளங்களை பெற்றுக் கொடுப்பதிலிருந்து சிறந்த அதிபர்களையும்,ஆசிரியர்களையும் இனம் கண்டு அவர்களின்
பிரச்சினைகளை தீர்த்து வைத்ததன் மூலம் இன்று 13 மாணவர்கள் சகல பாடங்களிலும் 9 ஏ சித்தியை பெற்றுள்ளனர்.
எனவே கல்வியாளன் நம்மை ஆட்சி செய்யும் போது நம் சமூகம் தலை நிமிர்ந்து நிற்பதில் எந்தவித ஆச்சிரியமுமில்லை