News Update :

Monday, March 20, 2017

TamilLetter

”ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக கோட்டபாயாவும் பிரதமராக மகிந்தவும் வரவேண்டும்

 கலாநிதி.தயான் ஜயதிலகா
ஹபீல் பாரிஸ் கோட்டபாய ராஜபக்ஸவின்மீதும் மற்றும் என்மீதும் ஒரு இருமுனையான விமர்சனத்தை எழுதியுள்ளார், நான்தான் முதன்மையான இலக்கு என்று அவர் சொல்கிdayanறார், ஏனென்றால் நான் தாங்கியிருக்கும் அறிவுசார் பரிமாணம் அல்லது அதன் போலிப் பகட்டுதான் அதற்குக் காரணம். அந்த கோட்பாட்டின் அதே மட்டத்தில் பதிலளிக்க எனக்குள் ஓரளவு ஆவல் தோன்றியது ஆனால் அது விடயத்தை வேறு வழியில் திசை திருப்பிவிடும். இந்த முழு விஷயமும் அதைப்பற்றியது அல்ல.
அதனால் கோட்பாடு அல்லது அறிவுசார்ந்த உலகைப் பொறுத்தமட்டில் எனது விமர்சனங்களை தெரிவிப்பதை நானே மட்டுப்படுத்திக் கொள்கிறேன், மற்றும்  சாந்தா பார்பரா, கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தின் 21ம் நூற்றாண்டின் உலகளாவிய இயக்கவியல் மையத்தின் மின்னணு வெளியீடான 14ம் பிரசுரம் 10வது தொகுப்பில் “த கிரேட் கிராம்சி: மாற்றீடான ஒரு இடதுசாரி திட்டம் பற்றிய கற்பனை” என்கிற தலைப்பில் பிரசுரமாகியிருந்த எனது சமீபத்தைய கட்டுரையின் (மார்ச் 2, 2017) வாசகர்களுக்கு””(http://www.21global.ucsb.edu/global-e/march-2017/great-gramsci-imagining-alt-left-project) இது விரைவில் டொமினிக் பொலொட் மற்றும் ஜீன் பியே பேஜ் ஆகியொரின் விமர்சனங்களுடன் விரிவான பதிப்பாக லா பென்ஸ் லிப்ரே இதழில் பிரான்சில் மறுபிரசுரம் செய்யப்பட உள்ளது.
கோட்டா ஜனாதிபதியாகவும் மகிந்த பிரதமராகவும் உள்ள எனது சூத்திரம், கடந்த டிசம்பரில் எனது 60வது பிறந்த நாள் நிகழ்வில் டிபிஎஸ்.ஜெயராஜ் நடத்திய ஒரு விரிவான நேர்காணலில் இருந்து வளர்ச்சி பெற்ற ஒரு யோசனையாகும். அதில் நான் பிடல்  மற்றும் ரவுல் கஸ்ட்ரோ இணைக்கு ஸ்ரீலங்காவில் நெருக்கமான சேர்மானம் மகிந்த மற்றும் கோட்டபாய என்று கூறியிருந்தேன். வெளிப்படையாக கூறினால் இது என்ன தெரிவிக்கிறது என்றால் இரண்டு சகோதரர்களின் சேர்மானத்தை பற்றி யோசிப்பது மிகவும் சரியானது என்றே. நான் சமீபத்தில் அதை கோட்டா ஜனாதிபதியாகவும் மகிந்தவை பிரதமராகவும் கட்டமைத்திருப்பது மூன்று காரணங்களுக்காக.
முதலாவது: 19ம் திருத்தத்தின்படி மகிந்த ஜனாதிபதி தேர்தலில் நிற்க முடியாது.
இரண்டாவது: ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற உள்ளது, ஆகவே மகிந்த தெரிவு செய்யப்பட்ட பிரதமராக வந்து பின்னர் 19ம் திருத்தத்தை மாற்றி அமைப்பதற்கான கேள்விக்கே இங்கு இடமில்லை (அதுதான் விரும்பத்தக்கதாக இருந்தாலும் அது நடக்கும் என்று எனக்கு நிச்சயமில்லை).
மூன்றாவது: கோட்டா ஜனாதிபதியாகவும் மற்றும் மகிந்த பிரதமராகவும் உள்ள சூத்திரம், அதே மாற்றத்துக்கான வெற்றிச் கூட்டணியாகவும் மற்றும் 1994ல் ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான யு.பி.எப்.ஏ அரசாங்கத்தில் ஜனாதிபதியாக சந்திரிகாவும் மற்றும் பிரதமராக திருமதி பண்டாரநாயக்காவும் இருந்ததின் தொடர்ச்சியானதாகவும் அமைகிறது.
பாரிசின் விமர்சனம் ஒரு குறிப்பிட்ட பின்னணியில் அமைகிறது. ஒரு அம்சத்தில் அந்தப் பின்னணி எனது சூத்திரமான 2019 முடிவு மற்றும் 2020ல் நடக்க திட்டமிட்டுள்ள தேசிய தேர்தல்களில் எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ஸவும் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டபாய ராஜபக்ஸவும் களமிறங்குவதை குறிப்பிடுகிறது. ஆனால் ஒரு பரந்த சூழலில் அல்லது பச்சையாகச் சொல்வதானால் இப்போது ஒரு பிரச்சார யுத்தம் ஆரம்பமாகி உள்ளது. அந்த யுத்தம் மூன்று இடைத் தொடர்பான திட்டங்களைச் சுற்றிச் சுழல்கிறது பிரதானமாக புதிய அரசியலமைப்பு, புதிய ஜெனிவா பிரேரணை மற்றும் புதிய பொருளாதார கொள்கையின் திசை என்பனவே அந்த மூன்று திட்டங்கள்.
நான் வாதிடுவது என்னவென்றால் ஜனாதிபதி போட்டியில் கோட்டபாயவும் மற்றும் கோட்டா உடன் மகிந்த சேரும் ஒரு பின்னணியும் தீவிரமான மற்றும் ஆழமான நெருக்கடிகளுக்கு முன்மொழியும் ஒரு பதில் என்பதே. அந்த பதில் பன்முகத்தன்மை வாய்ந்தது. புதிய அரசியலமைப்புக்கு ஒரு உந்துதல் உள்ளது, அது நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றுவது - ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பனவற்றுக்கான காரணியாக  அந்த நோக்கத்துக்காக ஜே. ஆர். ஜெயவர்தனாவால் அறிமுகப்படுத்தப்பட்டது - மற்றும் மிகப் பெரிய பிணை முறி ஊழலில் அவருக்குள்ள பங்களிப்பு இன்னமும் தெளிவாக்க வேண்டிய நிலையிலுள்ள பிரதம மந்திரியின் அதிகாரத்தை மேலும்; அதிகரிப்பது, மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை மாற்றுவதற்கு வழி செய்வது. வடக்கு மாகாணசபை சமீபத்தில்தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீள இணைக்க வேண்டும் மற்றும் சுய நிர்ணய உரிமைகள் பற்றி ஒரு பிரேரணையை நிறைவேற்றியுள்ளது. அதன் முதலமைச்சரின் அரசியல் நடவடிக்கைகள் அரசியலமைப்பின் எல்லைக்கோட்டையே ஆட்டங்காண வைக்கும் தீவிரவாத தன்மையானதாக உள்ளது. ஒரு புதிய அரசியலமைப்பு மூலம் இந்த அமைப்புகளுக்கு அதிகாரத்தை மாற்றுவது ஒரு ஆபத்தான பைத்தியக்கார நடவடிக்கை.
இன்னும் அதிகம் ஆபத்தானது என்னவென்றால் ஒரு சர்வசன வாக்கெடுப்பு மூர்க்கமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பிரித்தானியர்கள் ஜின்னாவுக்கு வழங்கியதைப் போலவும் மற்றும் முஸ்தபா பர்ஷானி ஈராக்கி குர்திஸ்தானுக்கு வழங்கிய வாய்ப்பை போலவும் ஆகி விடும் - அந்த குறிப்பிட்ட பகுதிகளில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதன்பின் வடக்கிலுள்ள தமிழ் மக்கள் ஒரு ஒற்றையாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்புக்குள் வாழ்வதை நிராகரித்து விட்டார்கள் என்றும் அதனால் சுயநிர்ணயத்தை நடைமுறைப்படுத்தும் உரிமை அவர்களுக்கு உள்ளது என்று உலகத்துக்கு பிரகடனம் செய்ய முடியும்.
இதற்கிடையில் இந்த அரசாங்கம் தேசிய சொத்துக்கள் மற்றும் தேசிய இடைவெளிகளை விற்பதற்கு வழி தேடுகிறது அத்துடன் அடுத்த வீட்டுடன் சேர்ந்து ஸ்ரீலங்காவின் பொருளாதார இணைப்பை ஏற்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள்தான் அதன் ஒரே கோட்பாடாக உள்ளது மற்றும் இந்த சுதந்திர வர்த்தகத்தை பற்றி சேகுவேராவின் வார்த்தைகளில் விளக்கியுள்ளது “சுதந்திரமான கோழிகளுக்கு மத்தியில் சுதந்திரமான ஒரு நரி” என்று.
அதன்படி இன்று ஸ்ரீலங்காவில் நாங்கள் ஒரு இருத்தியல் நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. எங்கள் நாடு எங்களிடம் இருந்து களவாடப்பட்டு வருகிறது. எங்கள் வாக்குகள் எங்களிடம் இருந்து களவாடப்பட்டுள்ளது. 16 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு போலி எதிர்க்கட்சி எங்களிடம் உள்ள அதேவேளை 51 அங்கத்தவர்களைக் கொண்ட எதிர்க்கட்சி உருவாக்கம் பாராளுமன்ற எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்படவில்லை.
மிகப் பெரும்பான்மையான ஸ்ரீலங்கா பிரஜைகளான நாங்கள் ஸ்ரீலங்காவை திரும்ப பெறவேண்டிய தேவை உள்ளது மற்றும் அதை சரியான பாதையில் திரும்பவும் அதை இட வேண்டும், மேல் நோக்கிய ஒரு சிறந்த இடத்தில். அதற்கு சாத்தியமான ஒரு சிறந்த ஒரு குழு எங்களுக்குத் தேவை. அங்குதான் கோட்டபாயா மற்றும் மகிந்த உள்ளே வருகிறார்கள். 19வது திருத்தத்தின் யதார்த்தம் இல்லாவிட்டால் மகிந்த மற்றும் கோத்தபாய என்று என்னால் சொல்லியிருக்க முடியம். இந்த முறை வட்டத்தில் மகிந்த ராக்கெட்டின் வேகத்தை அதிகரிக்கும் ஊக்கியாக உள்ளார்.
அப்படியானால் கோட்டபாய பற்றிய எனது முந்தைய விமர்சனங்களுக்கு என்ன ஆயிற்று?  அந்த நேரத்தில் கோட்டபாயாவைப் பற்றி விமர்சனம் செய்த ஒரே ஆள் நான் மட்டுமே, அதுவும் மகிந்த முகாமில் இருந்து குறிப்பாக அப்படிச் செய்த ஒரே ஆள் நான்தான். அந்தக் கதை சொல்வது. கோட்டாவை பற்றிய எனது விமர்சனம் இடம்பெற்றது, அவர் மிகையான ஒரு கடின பாதுகாப்பு வரிசையில் மகிந்தவின் உள்ளுணர்வான நடைமுறை சமநிலையை விட தனித்த வழியை பின்பற்றிய காலத்தில். எனவே மகிந்தவின் வரிசையில் கோத்தாவின் மீதான ஒரு விருப்புரிமை நேரமாக அது இருந்தது. இன்று தேசப்பற்றுள்ள மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் மகிந்த மற்றும் கோட்டாவின் வரிசையில் அப்படியான தெரிவு இடம்பெறாது.
இன்று மகிந்த மற்றும் கோட்டா எதிர் ரணில் மற்றும் சந்திரிகா என்கிற ஒரு தெரிவு வரும்போது மகிந்தவின் கடந்தகால தவறுகள் மங்கிப்போய் இல்லாமல் போய்விடும்.
இன்று நாம் 2005க்கு மீண்டும் திரும்பியுள்ளோம், அங்கு மகிந்த கோட்டா பசில் நாமல் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி என்பன அரசாங்கத்தை சீர்குலைத்து, நாட்டை விற்கும் மற்றும் எமது ஆயுதப் படைகளினால் யுத்தம் நடத்தி விடுதலையையும் மற்றும் மீள் ஒற்றமையையும் எற்படுத்திக் கொடுத் வெற்றிகளை பின்வாங்க வைக்கும் ரணில் சந்திரிகா பங்காளிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற ஒன்று சேர்ந்து போராட வேண்டியுள்ளது. 2005க்கும் இன்றைக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அரசியலமைப்பு மற்றும் சமூக யதார்த்தங்களின் மாற்றம் காரணமாக ஏற்பட்டது, அதற்கு கோட்டபாய ஒரு உயரடுக்கு விசேட படைகளைப் போல ஒரு முன்னணி படை உறுப்பாக இருக்கவேண்டும் அதேவேளை மகிந்த ஒரு முன்னணிப் படையாகவும் கூட்டு எதிர்க்கட்சி பிரதான படையாகவும் இருக்க வேண்டும்.
கோட்டா தனது அபிவிருத்தி பார்வை மற்றும் தகுதிகளை நியாமான எந்த சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபித்துள்ளார். அவர் அலங்கரிக்கப்பட்ட ஒரு போர்வீரர் மாத்திரமல்ல தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோதிலும் தனது நாட்டை எப்படி பாதுகாப்பது என்று அவருக்கு நன்கு தெரியும், ஆனால் ஆக்கபூர்வம், நவீன பார்வை மற்றும் திறமை என்பனவற்றைக் கொண்ட ஒரு மனிதரும் கூட. அது போராளி மற்றும் கட்டுமானக்காரன் ஆகிய இரண்டு குணங்களையும் கொண்ட ஒரு கலவை அது இந்த நாட்டுக்கு மட்டுமல்ல உண்மையில்  எந்த நாட்டுக்கும் தேவை மற்றும் அப்படியான ஒருவரை வைத்திருப்பது அந்த நாட்டுக்கும் பெருமை.
நான் குமார் குணரட்னத்தை உட் கொண்டுவந்தது ஒரு எளிய அடையாள காரணத்துக்காகவே. ஒருநாடு அதன் பிரதான பணிகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் கையாள முடியும் என்று நான் நினைக்கவில்லை, அதை ஒரு தலைவரோ அல்லது அரசியல் தெரிவோ செய்ய முடியாது என்றும் நான் நம்புகிறேன். கோட்டபாயாவின் ஜனாதிபதித்துவம் மற்றும் மகிந்தவின் பிரதமர் பதவி ஆகிய இரண்டும் சேர்ந்து நான் நெருக்கமாக வேலை செய்த முந்தைய தலைவர் ஜனாதிபதி பிரேமதாஸ கொண்டுசெல்ல வேண்டும் என விரும்பிய இடமான மலேசியாவின் மகாதீர் மொகமட் அவர்களின்  அதே இடத்துக்கு கொண்டு செல்லும் என நான் உறுதியாக நம்புகிறேன். வேறு எந்த தலைவரும் ஃஜனாதிபதியும் அதைச் செய்ய முடியாது ஆனால் கோட்டபாயாவால் அதைச் செய்ய முடியும்.
எனினும் எனது வாழ்நாளிலேயே ஸ்ரீலங்கா இறுதியில் கியுபா மற்றும் சிங்கப்பூர் என்பனவற்றுக்கு அப்பால்  சாத்தியமான ஒரு தொகுப்பாக மாறவேண்டும், சிங்கப்பூர்வாசியின் மூளை மற்றும் கியுபன்வாசியின் இலட்சியம், ஒரு கியுபாவாசியின் இதயமும் ஆன்மாவும் கொண்ட நீதி மற்றும் நியாயமான சமூகம் அங்கிருக்க வேண்டும், அதில் இன மத காரணிகள் ஒரு புதிய இணைவு மற்றும் ஒரு புதிய அடையாளத்தை பெறுவதற்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாக இருக்கவேண்டும் என்பதைக் காண விரும்புகிறேன். அவற்றில் என்னைச் சுற்றி குமார் குணரட்னம் மற்றும் அவரது எப்.எஸ்.பி தோழர்கள் புபுது ஜாகொட மற்றும் துமிந்த நவகமுவ மற்றும் ஒரு ஜேவிபி தலைமையிலான சுனில் ஹந்துநெட்டி மற்றும் பிமால் ரத்னாயக்கா (ரணில் சார்பான வலதுசாரியை தவிர்த்து) ஆகியோரின் ஒரு கலவை தேவை என்கிற உணர்வு தெரிகிறது. இது அடுத்த தலைமுறைக்கான ஒரு பணியாகும் எங்களுடையது அல்ல (அந்த தலைமுறைகள் அரசியல் - இராணுவம் - இராஜதந்திரம் என பல பரிமாணங்களில் யுத்தத்தை போரிட்டு வென்றிருக்கும்).
எனினும் அது சாத்தியமாவதற்கு நாடு ஒரு மட்டத்திலான பொருளாதார மற்றும் கல்வி, நகரமயமாக்கல் மற்றும் விஞ்ஞ}ன அபிவிருத்தி என்பனவற்றில் முன்னேற்றகரமான ஒரு நிலையை அடைய வேண்டும் - அவை அனைத்தும் உலகளாவிய ரீதியில் தேசிய முதலாளித்துவ கட்டமைப்புக்கு போட்டியானதாக இருக்கவேண்டுமே தவிர சோசலிசம் சார்ந்ததாக இருக்கக் கூடாது.
எதிர்கால சமூக ஜனநாயகத்தை அல்லது அடுத்த தலைமுறையின் ஜனநாயக இடதுசாரி அரசாங்கத்தின் கீழான ஜனநாயக சோசலிசத்தை கட்டியெழுப்பும் வரலாற்று சிறப்புமிக்க பணி, இன்றும் மற்றும் நாளையும் பூரணப்படுத்தக்கூடியது மகிந்தவின் பின்துணையுடன் கூடிய கோட்டபாயாவின் வலிமையான, தேசப்பற்றுமிக்க, நவீனத்துவமான தலைமையின் கீழேயே.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-