அட்டாளைச்சேனை 15ம் பிரிவைச் சேர்ந்த ஐ.எல். நிஹால் என்பவர் இனம் தெரியாத நபர்களால் நேற்றிரவு(27) தாக்கப்பட்டார்.
தனக்கு சொந்தமான கெண்டரில் பொருட்களை ஏற்றிக் கொண்டு கொடுத்துவிட்டு திரும்பும் வழியிலே இத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
வெள்னை வேன் ஒன்றில் வந்த கும்பளே இத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனால் பலத்த தாக்குதல்களுக்குள்ளான சாரதி நிஹால் தமன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை தமன பொலிஸ் மேற்கொண்டு வருகின்றது.