News Update :

Friday, March 3, 2017

TamilLetter

அறிக்கை மட்டும் விடும் பளில் பி.ஏ.முடியுமானால் தனது சொந்த செலவில் ஒரு கூட்டத்தை நடாத்த முடியுமா?

நுஸ்கி அகமட்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தான் மூத்த போராளி என்று கூறிக் கொண்டு தனக்குத்தான் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டுமென்று அடிக்கடி கண்ணீர் விட்டு அறிக்கை விடுகிறார் ; பளில் பி.ஏ.

அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரசுக்காக எத்தனையோ நபர்கள் தனது சொத்துக்களையும் உயிர்களையும் பணயம் வைத்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள்.

கட்சிக்காக உங்கள் செலவில எத்தனை மேடை போட்டுள்ளீர்கள் யாராவது ஒருத்தர் போடும் மேடையில் நீங்கள் வந்து முன்வரிசையில் அமர்ந்து கொண்டு எதையோ பேசி விட்டு வீடு சொல்கின்றீர்கள்.மேடை அமைத்து அதை பிரிக்கும் வரைக்கும் அவனுகள் படும்பாடு உங்களுக்கு புரியாது ஸேர்;

ஒவ்வொறு பிரதேசத்திலும் பிரச்சார பொதுக் கூட்டம் நடாத்த வேண்டுமென்று கண்டியில் தீர்மாணிக்கப்பட்டது அந்த தீர்மானத்திற்கு அமைவாக உங்களால் ஓரு கூட்டத்தை அட்டாளைச்சேனையில் மேடை போட்டு நடாத்த முடியுமா?முடிந்தால் நடாத்தி காட்டுங்கள்

நீங்கள் சொந்தமாக ஓரு கூட்டத்தை நடாத்த தகுதியற்றவர்களாக இருந்து கொண்டு எப்படி தேசியப் பட்டியலை கோருவது இது நியாயமா?

தன் பணத்தை செலவு செய்து மக்களை அணிதிரட்டி பிரச்சாரக் கூட்டத்தை ஒருத்தர் நடாத்தும் போது அந்த கூட்டத்தில் ஏறி உங்களுக்கு தேசியப் பட்டியல் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுகின்றீர்களே இது மனித பன்பா?

ஏனவே நீங்கள் ஒரு கூட்டத்தை கூட்டி உங்களுக்கு தேவையானதை கேட்பதுதானே முறை

உங்களால் முடியுமா? உங்கள் செலவில் கூட்டம் கூட்ட
முடியாவிட்டால் காகம் கட்டும் கூட்டில் நீங்கள் போய் முட்டையிடாதீர்கள்

கட்சியினால் மாதமொன்றுக்கு 150000 ரூபா பணம் உங்களுக்கு வழங்கப்படுகின்றது தானே அதில் 50 ஆயிரம் ரூபாவை ஒரு கூட்டத்திற்க செலவிடலாம்தானே?

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-