News Update :

Friday, March 24, 2017

TamilLetter

ஒலுவில் அல்-மதினா பாடசாலைக்கு மூன்று மாடிக் கட்டிடம் - மாகாண சபை உறுப்பினர் தவம் உறுதி








எந்தவித கட்டிட வசதிகளோ இல்லாத   ஒலுவில் அல் மதினா வித்தியாலயத்திற்கு இந்த வருடத்திற்குள் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் அமைத்துக் கொடுப்பேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்.தெரிவித்தாா்.

ஒலுவில் அல் - மதினா பாடசாலையின் வருடாந்த விழா அதிபர் ஏ.அமீர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தாா்.

தொடர்ந்து உரையாற்றுகையில் ஒலுவில் பிரதேசத்தில் எட்டாவது பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டை கடந்துள்ளது.இருந்த போதும் இப்பாடசாலை ஒரு சிரிய கட்டிடத்துக்குள் முடங்கிக் கிடக்கிறது.எனவே இந்த வருடம் முடிவதற்குள் சகல வசதிகளும் கொண்ட புதிய மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று அமைப்பதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் அதற்கான நிதியும் மிகவிரைவில் வந்துவிடும் என அவர் மேலும் கூறினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-