News Update :

Tuesday, March 28, 2017

TamilLetter

பாலமுனை மக்கள் அமைச்சர் ரவுப் ஹக்கிமுக்கு சவால்


றிப்கான் சர்மி

பாலமுனை   முற்று முழுதாக ஆத்மீக முறைப்படி கட்டமைக்கப்பட்ட  ஒரு பிரதேசமாகும்.இஸ்லாமிய  விழுமியங்களை தனது உயிருக்கும் மேலாக மதிக்கும் பெரியோர்கள் வாழ்ந்து மறைந்த புனித பூமி

இந்த புனித  பூமியில்  அனாச்சாரங்களை சர்வ சாதாரணமாக கடைப்பிடிக்கும் யாருக்கும் எம் மக்கள்  தலை தாழ்த்திய வரலாறு    இல்லை

இன்று நமது சமூகத்திற்கு தலைமை தாங்கும் அரசியல் தலைவர்கள் பல்வேறுபட்ட குற்றாச்சாட்டுக்களுக்கு ஆளாகி வருகின்றனர்.அதற்கான பல  ஆதாரங்களும்  வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அமைச்சர் ரவுப் ஹக்கீம் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது சுமத்தப்படும்  குற்றாச் சாட்டுக்கள் இஸ்லாத்தில் கூறப்படும் பெரும் பாவங்களாக அமைந்துள்ளது.

பெரும் பாவங்களை தனது வாழ்க்கையில்  சர்வ சாதாரணமாக   செய்து வரும் ஒரு நபர் ஒரு முஸ்லிம் சமூகத்தின் தலைவராக செயற்பட முடியுமா?அப்படி அந் நபரை நமது சமூகம் ஏற்க முடியுமா?என பல்வேறு கேள்விகள் முஸ்லிம்களான எமக்கு உள்ளது.

தலைவர் ரவுப் ஹக்கிம் பல்வேறு பிரதேசங்களில் பிரச்சார கூட்டங்களை நடாத்தி வருகிறார்.அப்  பிரதேசங்கள் அவர் செய்யும் இஸ்லாத்திற்கு எதிரான செயற்பாடுகளை கண்டு கொள்ளாமல் உள்ளமை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


ஆனால் எமது பிரதேசம் அப்படி இருந்து விட முடியாது.இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும்.அவர் தன்னை  குற்றமற்றவர் என்பதை எம் மக்கள் முன் கூற வேண்டும்.அதனை செய்ய தவறும்பட்சத்தில்   மக்கள்  தீர்ப்பு வழங்க வேண்டி ஏற்படும்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-