News Update :

Friday, March 31, 2017

TamilLetter

சமூகம் என்று வரும் போது துணிந்து நிற்பவன் பிரதியமைச்சர் ஹரீஸ் - கல்முனையில் தவம்



எதை வேண்டுமென்றாலும்  விட்டுக் கொடுக்க முன்வரும் பிரதியமைச்சர் ஹரிஸ் சமூகம் என்று வரும் போது எதையுமே விட்டுக் கொடுக்க மாட்டான் என்பதில் நான் நுாறு வீதம் நம்புகின்றேன் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் .எல்.தவம் தெரிவித்தார்.

கல்முனை பிரதேசத்தில் 13 கோடி ரூபா நிதியில்   பூர்த்தி செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைத்த பின்னா் ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தவம் இவ்வாறு கூறினார்.

இலங்கை முஸ்லிம்கள் தொடக்கம் சர்வதேச முஸ்லிம்கள் வரை எதிரிகளால் தினமும் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்நம்மை  அழிப்பதற்கு    எதிரிகள் முன்பு கடைப்பிடித்து வந்த முறைமையை இப்போது வேறு வடிவத்தில்  மாற்றியுள்ளனர்.

நமது  சமூகத்திற்குள்ளயே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தி அதன் மூலம் முரண்பாடுகளை தோற்றுவித்து ஒட்டுமொத்த இழப்புக்களையும் நமது சமூகம் மாத்திரமே அடைய வேண்டுமென்பதே இப் போதைய புதிய  யுக்தியாக மாற்றம் பெற்றுள்ளது.

அதன் இரண்டாம் கட்ட  நடவடிக்கையினை முஸ்லிம் கூட்டமைப்பு என்ற பெயரில் ஆரம்பித்துள்ளனர்.இதற்கு தேசியத் தலைவராக அமைச்சர் ரிஷாட்டும், கிழக்கு   மாகாண தலைவராக முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும் செயற்படுவதற்கு இணக்கம் கண்டுள்ளனர்.

எனவே முஸ்லிம் சமூகம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய காலகட்டத்திற்குள் நாம் வந்துள்ளோம். வரலாற்று ரீதியாக    கல்முனை சமூக ரீதியான தலைவர்களை தந்துள்ளது.அதே வழியில் இன்று ஹரிஸையும் தந்துள்ளீர்கள்.


சமூகம் என்று வரும் போது எதை வேண்டுமென்றாலும் இழந்து மடித்துக்கட்டிக் கொண்டு நாங்கள்   நிற்போம் என கூறினார் மாகாண சபை உறுப்பினர் .எல்.தவம்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-