News Update :

Thursday, March 23, 2017

TamilLetter

மாற்று தலைமையின் பக்கம் தாவும் அட்டாளைச்சேனை இளைஞர்கள்




அர்ஷாத்
அட்டாளைச்சேனை மக்களின் 95 வீதமான வாக்குகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான பயனை அப் பிரதேசம் அடைந்துள்ளதா எனும் கேள்வி இளைஞர்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

காலத்துக்கு காலம் அட்டாளைச்சேனையின் அரசியல் தலைமைத்துவங்களில் மாற்றங்கள் நிகழ்ந்த போதும்  எதிர்பார்த்த    இலக்கை அப் பிரதேசம்    இன்னும் அடையவில்லை என்பது வேதனையளிக்கின்றது.

இன்று சமகாலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்ற சுழ்நிலையில் அம் மக்களின் பிரச்சினைகளை தலைமையேற்கும் மற்றும் வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகளால் தீர்த்து வைக்க முடியாமல் காலம்   தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அரசாங்கத்தின் திட்டங்களைக் கூட மக்களின் போராட்டங்களால்தான் வெற்றி   பெற முடியும் எனும் நிலைப்பாடு தோன்றியுள்ளது.

அந்-நுார் பாடசாலை தொடக்கம் துறைமுக பிரச்சினைஇஒலுவில் கடலரிப்புஇஅஷ்ரப் நகர் பிரச்சினைஇ என உரிமைசார் பிரச்சினைகள்  ஏராளமாக  தேங்கி கிடக்கின்றன.

அத்தோடு இளைஞர்களின் தொழில்வாய்ப்பு, வீதிஅபிவிருத்தி, வைத்தியசாலையின் தரம்,  பொது நுாலகம், பிழையான சந்தைக் கட்டிடங்கள்,  கலாச்சார மண்டபம்,  கோணவத்தை ஆறு என அபிவிருத்தி சார்ந்த எத்தனையோ விடயங்கள் யாருக்கும் தெரியாமல் மங்கிப்  போய்விட்டது.

 பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகிய நிறுவனங்களுக்கு வருடாந்தம் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதிகளைக் கொண்டு  செய்யும் அபிவிருத்தி வேலைகளுக்கு போட்டி போட்டு உரிமை கோரும் அரசியல்வாதிகளே   அதிகம் காணப்படுகின்றனர்

இன்று இப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு புதிய சிந்தனையுள்ள ஆற்றல் மிக்க இளைஞர்களின் கையில் அதிகாரங்கள் சென்றடைய வேண்டுமென்பதில் மக்கள் உணரத் தொடங்கி விட்டனர்.

அந்த வகையில் மக்களின் அடிமட்ட உரிமை சார்ந்த பிரச்சினைகளை மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராடும்  முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீனின் ஆளுமையை    மக்கள் இனம் கண்டுள்ளனர்.

  முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப போராளிகள் இன்று கட்சித் தலைமையால் மறக்கடிக்கபட்டுவரும் நிலையில் அவர்களை இனம் கண்டு ஒத்தடம் போடும் நபராக ஆப்தீன் மாறியுள்ளார்.

கட்சிக்காக வருடக் கணக்கில் தனது வாழ்நாளை கழித்த எத்தனையோ போராளிகள் இன்று ஒரங்கட்டப்பட்டு பார்வையாளராக மாறியுள்ளனர்.இவர்களை மீண்டும் பொதுப் பணியில் ஈடுபடுத்த சில திட்டங்களை ஆப்தீன் மேற் கொண்டு வருவதோடு   இளைஞர்களின் செயற்பாட்டிற்கும் முன்னுரிமையளித்து வருவதால் அவரின் தலைமையின் கீழ் மக்கள் அணிதிரண்டு வருகின்றனர்.   

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-