News Update :

Friday, March 3, 2017

TamilLetter

ரவூப் ஹக்கிமின் இன்னுமொறு விக்கட் அன்ஸிலிடம்


குல்ஸான்

பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.பாஷீத் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் மேற்கொண்டு வரும் உண்மையைத் தேடிய பயணத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த சமூகத்தை பிழையாக வழி நடத்துகிறார்.எனவே அவரிடமிருந்து இந்த கட்சியையும் இந்த சமூகத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எமது கடமையென அன்ஸில் தெரிவித்திருந்ததுடன் இதில் இணைந்து கொள்ளுமாறு கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த வகையில் நேற்றிரவு நிந்தவூரில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக  நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கபபட்டவர்களில்  ஒரு குறிப்பிட்ட சில உயர்பீட உறுப்பினர்களே இதில்  கலந்து  கொண்டனர்.

இக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத முக்கிய பிரமுகர்கள் தொலைபேசி மூலமும் நேரடியாகவும் தமது வருத்தத்தை சம்மந்தப்பட்டவத்களிடம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.பாஷீத் அன்ஸிலின் வீட்டுக்கு விஜயம் மேற் கொண்டு தான் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததையிட்டு கவலை தெரிவித்திருந்தார்.அத்தோடு இப் போராட்டம் வெற்றி பெற வாழ்த்ததும் தெரிவித்திருந்தார்.

மிகவும் இரகசியமான முறையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றதால் மேலதிக தகவலை அறிய முடியாமல் உள்ளது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-