News Update :

Monday, March 6, 2017

TamilLetter

அந்-நூர் மக்களின் போராட்டத்திற்கு பலன் - மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு





அக்ரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தை அபிவிருத்தி திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாததை கண்டித்து அப் பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று இடம் பெற்றது.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தில் அந்-நூர் மகா வித்தியாலயம் இணைத்துக் கொள்ளப்பட்ட போதும் அப் பட்டியலிருந்து இப் பாடசாலை வலயக் கல்விப் பணிப்பாளரால் நீக்கப்பட்டிருந்தது.

வறுமை மற்றும் சுனாமி அனர்த்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் இப் பிரதேச மக்களின் கல்வி நலனில் அரசியல் வாதிகளும் கல்வி அதிகாரிகளும் அசமந்த போக்கை கடைப்பிடித்து வருவதாக பிரதேச மக்கால்; குற்றம் சுமத்தப்பட்டன ;.

இரண்டாவது நாளாக தொடரும் இப் போராட்டத்தில் பாடசாலை மாணவர்களும் பாடசாலைக்கு வருகை தராமல் தமது கல்வி நடவடிக்கைகளை இடை நிறுத்தினர்;.

இன்று இது தொடர்பாக குறித்த இடத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாகாண சபை உறுப்பினர் வலயக் கல்விப் பணிப்பாளரோடு தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
வலயக் கல்விப் பணிப்பாளரின் பதிளில் திருப்தியடையாத மாகாண சபை உறுப்பினர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரோடு தொலைபேசியில் உரையாடினார்.

இதற்கு பதிலளித்த கல்வியமைச்சர் அமைச்சின் காரியாலத்திலுள்ள ஆவணங்களை இன்றே நான் முதல் வேலையாக ஆராய்வதாகவும் மீண்டும் ஒரு முறை வலயக் கல்விப் பணிப்பாளரோடு கலந்துரையாடுமாறும் மாகாண சபை உறுப்பினர் தவத்திடம் கோரிக்கை விடுத்தார்.

வலயக் கல்விப் பணிப்பாளரால் முறைகேடுகள் மற்றும் அநீதிகள் இப் பாடசாலைக்கு எதிராக இடம் பெற்ருந்தால் அதற்கான நிவாரணத்தை பெற்றுத் தருவதாகவும் மாகாண சபை உறுப்பினரிடம் கல்வி அமைச்சர் வாக்குறுதியளித்தார்.

இதன் அடுத்த கட்டமாக அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு விஜயம் செய்த மாகாண சபை உறுப்பினர் பாடசாலைக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளரிடம் வாக்குவதாத்தில் ஈடுபட்டார்.

இச் சந்தர்ப்பத்தில் மாகாண கல்வியமைச்சர் மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தினார்.இப் பாடசாலைக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதை எற்றுக் கொண்ட அமைச்சர் உடனடியாக குறிப்பிட்ட திட்டத்தில் இப் பாடசாலையை இணைத்துக் கொள்ளுமாறு மாகாண கல்வி பணிப்பாளருக்கு தான் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அதற்கான செயற்திடத்தில் மாகாண பணிப்பாளர் ஈடுபட்டுள்ளதாகவும் எனவே நீங்கள் என்னை நம்பலாம் என கல்வியமைச்சர் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்திடம் உறுதி வழங்கினார்.

அந் -நுார் பாடசாலையின் உரிய ஆவணங்களை கல்வி அமைச்சுக்கு இன்றே சமர்ப்பிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளரை வேண்டிக் கொண்டார் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்

கிழக்கு மாகாண கல்வியமைச்சரின் கவனத்திற்கு இப் பிரச்சினையை கொண்டு சென்று உரிய உடனடித் தீர்வைப் பெற்றுத்தந்த மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்திற்கு அந்-நூர் கல்வி சமூகம் பாராட்டு தெரிவித்தது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-