News Update :

Wednesday, March 22, 2017

TamilLetter

‘AIDS’ விழிப்புணர்வு; சிவப்பு வண்ணத்தில் ஐபோன் 7 அறிமுகம்


ஆப்பிள் நிறுவனமும் ரெட் நிறுவனமும் பங்குதாரர்களாகி 10 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ரெட் என்ற சிறப்பு கைத்தொலைப்பேசிகள் சிவப்பு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயை ஆப்பிரிக்காவில் முற்றிலும் அழிக்க நிதியுதவிகள் திரட்டவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல தனியார் நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் அமைப்பே இந்த ரெட் நிறுவனமாகும். ரெட் நிறுவனத்துடன் 10 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிள் இணைந்து ஐபோட் நானோ ரெட் என்ற சிறப்பு கைத்தொலைப்பேசியை அறிமுகப்படுத்தியது முதல் இப்புதிய வெளியீடு வரை பயனீட்டாளர்கள்  அமோக ஆதரவைத் தந்து எய்ட்ஸ் விழிப்புணர்வையும் பரப்பியுள்ளனர் என ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறுவக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுவரை ஆப்பிள் நிறவனம் 130 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ரெட் நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியிருப்பதால் ஆப்பிள் நிறுவனம் உலகிலேயே மிகப் பெரிய தனியார் நிறுவன நன்கொடையாளராகக் கருதப்படுவதாக ரெட் நிறுவனத்தின் தலைமை நிறுவகஅதிகாரி டெபோரா டுகன் தெரிவித்திருக்கிறார்.
ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்  கைத்தொலைப்பேசிகள் நவீன கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. iOS 10-ஐ கொண்டுள்ள இந்த ஐபோன்களின் ஏப்ஸ் (apps) மேலும் சிறப்பாக இயங்கும்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-