News Update :

Tuesday, March 7, 2017

TamilLetter

அமைச்சர்களுக்கு புதிதாக வாகன கொள்வனவுக்கு 54 கோடி



நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கும் நடுவில் அமைச்சர்களுக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு பாராளுமன்றத்தில் இன்று  பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 6 அமைச்சர்கள், 3 இராஜாங்க அமைச்சர்கள், 2 பிரதி அமைச்சர்கள் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோருக்கு சுகபோக வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கே இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

53 கோடியே 99 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபா இவ்வாறு கோரப்பட்டுள்ளது.இது தவிர பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் ரூபா வழங்குவதற்கும் இன்று அனுமதி கோரி பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 44 கோடி ரூபா வேண்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-