இலங்கையின் 44ஆவது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், புதிய பிரதம நீதியரசராக, உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் பிரியசாத் டெப், நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த நீதியரசரை நியமிக்குமாறு, சிரேஷ்ட நீதியரசர்களான பிரியசாத் டெப் மற்றும் கே.ரீ.சித்ரசிறி ஆகியோரின் பெயர்கள், ஜனாதிபதியினால், அரசியலமைப்புச் சபைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, , சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய அரசியலமைப்புச் சபை, நாட்டின் 45ஆவது பிரதமத நீதியரசராக, பிரியசாத் டெப்பைத் தெரிந்தெடுத்தது