News Update :

Friday, March 31, 2017

TamilLetter

அமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி


அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்க்கு சொந்தமான பஸ் மீது டிரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
பலியானவர்கள் அனைவரும் வயதானவர்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அபோட் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து டெக்சாஸ் மாகாண போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-