பதினான்கு வயதுடைய ஆஸ்திரேலியாவின் குய்ன்ஸ்லாந்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் ஒருவன், ஒரு மலைப் பாம்பைக் காப்பாற்றுவதற்காக நடத்திய போராட்டம் மீதான காணொளி சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தங்கள் வீட்டில் நிறுத்தப்பட்டடிருந்த டோடோட்டோ வாகனம் ஒன்றின் கீழ் பகுதியில் புகுந்து, உள்ளே சுருண்டு சிக்கிக் கொண்ட அந்த மலைப் பாம்பைக் காப்பாற்ற மிகத் துணிச்சலுடன் சிறுவன் போராடினான்.
காரின் அடியில் புகுந்து உள்ளே சிக்கியிருந்த 2 மீட்டர் நீளமுள்ள பாம்பைக் கையால் பிடித்து வெளியே இழுப்பதற்கு சிறுவன் வொல்லி வார்ட்ரோப் கடுமையாகப் போராட நேர்ந்தது.
'துணிச்சலாக பாம்பைப் பிடித்து விட்டேன். அதிர்ஷ்டவசமாக அதன் தலைப் பகுதி என் கைக்குக் கிடைத்து விட்டதால் நான் தைரியமாக இருந்ததோடு அதை பத்திரமகாக வெளியேற கொண்டுவரவும் முடிந்தது என்று சிறுவன் குறிப்பிட்டான்.
அந்த மலைப் பாம்பை பத்திரமாக வெளியே கொண்டுவர சிறுவன் வொல்லி வார்ட்ரோப் முயன்று கொண்டிருந்த வேளையில் அவனுடைய தந்தையும் அருகில் இருந்தார். சிறுவன் வெற்றிகரமாக பணியைச் செய்து முடித்தபோது அவனது தந்தை உற்சாகமாக கை கொடுத்து மகனைப் பாராட்டினார்.