மாதவனும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ள புதிய படம் விக்ரம் வேதா. இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டது.புஸ்கர் இயக்கும் இப்படத்தில் மாதவனோடு முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இரட்டை நாயகர்களின் படம் அண்மைய காலமாக நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இவர்களின் 'இணை' எவ்வாறு இருக்கும் என இப்போதே ரசிகர்கள் எதிர்ப்பார்க்க தொடங்கியுள்ளனர்.எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியானது. வை நோட் ஸ்டுடியோ வெளியிட்ட இந்த டீசர் இரண்டு மணிநேரத்தில் 20,000க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
Thursday, February 23, 2017
'விக்ரம் வேதா' டீசர்: மாதவனோடு விஜய் சேதுபதி இணையும் அதிரடி படம் (VIDEO)

About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-