நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் அனைவரும் மெரினாவில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின்னர் சசிகலாவின் சபதம் நிறை வேறியிருப்பதாக நிருபர்களிடம் கூறினார்.நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா- எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் விரைந்து சென்று மரியாதை செலுத்தினர்.தமிழகத்தில் வறட்சி நிலவுவதால் குடிநீர்ப் பிரச்சனைக்குத் நாங்கள் முன்னுரிமை தருவோம் என்று முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.மேலும், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திமுகவினர் சட்டசபையை முடக்க நினைத்தனர். அவர்களின் எண்ணம் ஈடேற வில்லை. ஜெயலலிதா கண்ட கனவை, எம்ஜிஆர் கண்ட கனவை நனவாக்குவது தான் எங்களின் லட்சியம். சசிகலாவின் சபதம் நிறைவேற்றப் பட்டிருக்கிறதுனென்று அவர் சொன்னார்.இதனிடையே திருப்பபூரில் சபாநாயகர் தனபால் அலுவலகம் மீது மர்ம நபர்களால் கல்வீச்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது சட்டப் பேரவையின் போது திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
Saturday, February 18, 2017
சசிகலா சபதம் நிறைவேறி விட்டது! முதல்வர்

About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-