நானொரு நடிகன் என்பதைவிட என்னை ஆன்மிகவாதியாக கருதிக் கொள்வதிலேயே நான் மிகவும் பெருமை அடைகிறேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு விழாவிற்கு தலைமை தாங்கினார். பரமஹம்ச யோகானந்தரினின் "தெய்வீக காதல்" ஆன்மீக புத்தகத்தை வெளியிட்டார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ரஜினி பேசுகையில், "எனக்குப் பணம், புகழ், ஆன்மிகம் இவற்றில் எது வேண்டும் என கேட்டால் நான் ஆன்மிகம் தான் வேண்டும் என கூறுவேன். ஆன்மிகத்தில் அதிக சக்தி கிடைக்கும் என்பதால் அதை பின்பற்ற பிடிக்கும். நான் குழப்பவாதி இல்லை,
ஆன்மீகப் பாதையில் என் முதல் குரு அண்ணன் சத்யநாராயணா. அவரது மறைவுக்கு பின்னர் பல்வேறு குருமார்களை பின்பற்றி வந்திருக்கிறேன். எனது ஆன்மீகத் தேடல் தொடர்ந்து கொண்டே உள்ளது. இமயமலையில் ஏராளமான ஆன்மீக ரகசியங்கள் உள்ளன.
ராகவேந்திரரிடம் ஆன்மீகத்தை கற்றுக்கொண்டேன். நான் நடிகன் எனபதை விட ஆன்மிகவாதி என கூறிக்கொள்வதில் மிகுந்த பெருமை யடைகிறேன்.
ஆன்மீகப் புத்தகங்களைப் படிப்பதில் எப்போதும் ஆர்வம் உண்டு. ஆண்டவன் வருவதற்கு மனதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எது நல்லது கெட்டது என்று தெரிந்தாலும் நாம் தவறு செய்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.