News Update :

Saturday, February 18, 2017

TamilLetter

பொத்துவிலுக்கான புதிய மாகாண சபை வேட்பாளர்


பொத்துவில் அஸ்மீர்

அம்பாரை மாவட்டத்தின் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஓரு பிரதேசமாக பொத்துவில் பிரதேசம் காணப்படுகின்றது
பொத்துவில் பிரதேச மக்கள் அடிப்படை பிரச்சினைகள் தொடக்கம் இன்னும் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதோடு பெரும்பான்மை சமூகத்தினரின் நில ஆக்கிரமிப்பிற்கும் உட்பட்டு வருகின்றனர்.

புரம்பரை பரம்பரையாக ஆழ்கடல் மீன்பிடி, ;   நண்ணீர் மீன்பிடி,விவசாயம்,கால்நடை என்பன் வாழவாதார தொழிலாக செய்து வந்த போதும் அதற்கும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றது அரசாங்கம். இதனால் இம் மக்களின் வாழ்க்கை ; போராட்ட களமாக மாறியுள்ளது.

இதற்கெல்லாம் பிரதான காரணமாக இவர்கள் வாக்களித்து ஏற்றுக் கொள்ளும் அரசியல் தலைமைகள் உரிமை சார்ந்த வேலைத்திட்டங்களை அடையாளப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

அத்தோடு உள்ளுர் அரசியல் தலைவர்கள்; சில்லரைத்தனமான அதிகாரப் போட்டி காரணமாக அபிவிருத்தி தொடக்கம் தீர்மானம் மேற்கொள்வதிலும்; இடைஞ்சல்களை ஏற்படுத்துவதால் பாரிய சவால்களை ; அமைச்சர்களும் அரச நிர்வாகிகளும் குழப்பமடைந்து வருகின்றனர்.

குறிப்பிட்ட ஒரு சில உள்ளுர் அரசியல் வாதிகள் புதிய சிந்தனையுள்ள இளைஞர்களுக்கு வழிவிடாமல் பதவியை கட்டிப் பிடித்துக் கொண்டு தான் மட்டும் சகல அதிகாரங்களையும் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ள முனைவதால் சிறந்த தலைமைத்துவத்திற்கான இடைவெளி அதிகரித்து காணப்படுகின்றது. 

இன்று புதிய இளைஞர்கள் பல்வகைத் திறமைகளை சுமந்து களத்துக்கு வருவதற்கு தயாராகிக் கொண்டு இருக்கின்றனர்.இவர்களுக்கு வழிவிட்டு ஆதரவு வழங்குவது எதிர்கால சமூகத்திற்கு நாம் செய்யும் கைமாறகும்.
இப்படியான சூழ்நிலையில் இன்னும் சில மாதங்களில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடவுள்ளது.

இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதன் மூலம் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை இலகுவாக பெறமுடியும்.அந்த வகையில் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 06 வேட்பாளர்களை றிறுத்தும் இந்த 6 வேட்பாளர்களும் இரண்டு வலயமாக பிரிக்கப்படுவர்.கல்முனை,சாய்ந்தமருது, சம்மாந்துரை ஆகிய பிரதேசங்கில் மூன்று வேட்பாளர்களை உள்ளடக்கிய ; ஒரு வலயமாகவும்; நிந்தவூர்,அக்கரைப்பற்று,பொத்துவில் ஆகிய பிரதேங்களில் மூன்று வேட்பாளர்களை உள்ளடக்கிய ஒரு வலயமாகவும் பிரிக்கப்படுவர்.இதில் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளதால் மாகாண சபைத் தேர்தலில் அந்த பிரதேசத்தில் வேட்பாளரின்; தேவை ; இல்லாமல் போகும்
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் பொத்துவிலுக்கு ஒரு வேட்பாளர் நியமனம் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுவதால் அந்த வேட்பாளர் யார் என்பதை ; தீர்மானிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் பொத்துவில் மக்களைச்சாரும்
இன்று பொத்துவிலைச் சேர்ந்த  மூன்று வேட்பாளர்கள்; வேட்பாளராக வருவதற்கு கட்சியின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

எது எப்படியிருந்தாலும்  இன்றைய கள நிலவரத்தின்படி முன்னாள் தவிசாளர் வாஸீத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன் அவர் பதவி வகித்த காலத்தில் மஹிந்தவுக்கு ஆதரவாக குறிப்பாக அறுகம்பையில் உல்லாச ஹொட்டல் நிர்மாணிப்பதற்கு சந்தோசமாக அனுமதி வழங்கிய குற்றச்சாட்டு நிலவி வருவதுடன் அவரின் தலைமையின் கீழ் செயற்பட்டுவந்த 19 இளைஞர் கழகங்கள் பிரதேச சபை உறுப்பினர் ரஹீம் தலைமையை ஏற்று அவர் பின்னால் அணி திரண்டுள்ளது.

அத்தோடு கடந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் பொத்துவில் பிரதேசத்தில் போட்டியிட்ட இளைஞரை பக்கத்து பிரதேசங்கள் ஆதரித்த போதும் மறைமுகமாக அந்த வேட்பாரை தோற்கடித்தது பாரிய எதிர்வலைகளை ஏற்படுத்தியது,மற்றும் தான் பதவி வகித்த காலத்தில் பிரதேச சபை உறுப்பினர்களோடு இணைந்து செயற்படாமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு கட்சியின் மூத்த போராளிகளை சங்கடத்துக்குள் உள்ளக்கியதும் அவரின் செல்வாக்கில் பாரிய சரிவை ஏற்படுத்தியது.

மேலும் ஒரே நபர் தொடர்ச்சியாக எல்லா அதிகாரங்களையும் கையகப்படுத்துவது ஜனநாயகத்திற்கு மாத்திரமல்ல பங்கீட்டிலும் நியாயத்திற்கு எதிரானது

முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எம்.தாஜ்சுதீன் மற்றும் இளவயது தொழிலதிபர் ரஹீம் ஆகிய இருவரில் யார் சிறந்தவர்  என்பதை பொத்துவில் எதிர்காலம் தீர்மானிக்கும்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-