News Update :

Tuesday, February 7, 2017

TamilLetter

நோர்வே புலம்பெயர் புலி தலைவர் நெடியவனை ஸ்ரீலங்காவிடம் கையளிக்குமா?


                                                      டி.பி.எஸ்.ஜெயராஜ்
பாகம் - 2
துரோகத்தனமான நிகழ்வுகள்
இந்த துரோகத்தனம் மற்றும் வெளியேற்றும் நடவடிக்கை என்பனவற்றைப்பற்றி விரிவாக “தமிழ் தேசியவாத அரசியலில் துரோகத்தனத்தின் தொடர் நிகழ்வுகள்” என்கிற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஒன்று 14 மார்ச் 2015 டெய்லி மிரர் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. அதிலிருந்து ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது:“எந்த ஒரு தமிழனும் சமரச அரசியலை முன்மொழிந்தால் அல்லது அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பதற்கு ஆதரவு தெரிவித்தால் அவரைத் தாக்குவதற்காக அவரது தலைக்கு மேல் துரோகத்தனத்தின் வாள் ஒன்று மயிரிழையில் தொங்கிக் கொண்டிருக்கும். தற்போதைய நிலமையில் ஒப்பீட்டளவில் மிதவாத தலைவர்களான ஆர்.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய படங்கள் மற்றும் கொடும்பாவிகள் என்பன எரியூட்டப் பட்டுள்ளன. ரி.என்.ஏ தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் எல்.ரீ.ரீ,ஈ சக்திகளின் விருப்பத்துக்குரிய இலக்கு. அவர் துரோகி என பரவலாக இழிவு படுத்தப்பட்டு வருகிறார். முன்பு குறிப்பிட்டதைப் போல கடந்த கால நடைமுறை என்னவென்றால் புலிகள் ஒருவரை அழிக்க நினைத்தால் அவரை ஒரு துரோகி என அரக்கத்தனமாக சித்தரிப்பது பின்னர் அவரைப் பூண்டோடு அழிப்பதுதான் நடைமுறை.
அதிர்ஷ்டவசமாக புலிகளுக்கும் அவர்களது சக பயணிகளுக்கும் இனிமேல் இது ஒரு தெரிவாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால் ஸ்ரீலங்காவில் புலிகளை இராணுவ ரீதியாக அழித்ததின் மூலமாக மகிந்த ராஜபக்ஸ தமிழர்களுக்கு மிகச் சிறந்த பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். பிரபாகரனுக்கு பின்னான சகாப்தத்தில், இருக்கக்கூடிய செயல்முறை படுகொலை அல்ல, ஆனால் அவர்களின் குணாதிசயங்களை படுகொலை செய்வது. அந்த திட்டம் இலக்கு வைத்திருப்பவரை ஒரு துரோகி எனச் சித்தரித்து அவரைக் கொல்லாமல் கொல்வது ஆகும். உடல் ரீதியாக கொல்ல இயலவில்லை அதனால் இரத்தவெறி பிடித்த பேய்கள், உருவப்படங்கள் மற்றும் கொடும்பாவிகளை தகனம் செய்து தங்கள் வேட்கையை திருப்தி செய்கின்றன. எனினும் ஒரு அழிவுத் திறனை நோக்கிச் செல்லும் இந்தப் போக்கினை தடுக்காமல் விட்டாலோ அல்லது இப்போதே அடக்கி வைக்காமல் விட்டாலோ இதன் மூலம் பெரிய ஆபத்து காத்திருக்கிறது.”
மேலே குறிப்பிட்ட வரிகளை கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் எழுதியிருந்தேன், வெளிநாட்டு புலிகள் அல்லது அவர்களது கூட்டாளிகள், யுத்தத்துக்கு பின்னான ஸ்ரீலங்காவின் தற்போதைய காலகட்டத்தில் கொலைகளை நாடாமலோ அல்லது படுகொலைகளை ஊக்குவிக்காமலோ இருக்க மாட்டார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. இது எதனாலென்றால், யாருக்காவது; சிறிதளவு பகுத்தறிவு மற்றும் குறைந்த பட்சம் கடுகளவாவது ஸ்ரீலங்காவில் உள்ள தமிழ் மக்களின் நலனில் அக்கறை இருக்குமாயின் வன்முறைகளின் மீள் எழுச்சி அல்லது வெடிப்பு சமுதாயத்தின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு தற்கொலை முயற்சி என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். ஆனால் எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அதன் சக பயணிகள் பகுத்தறிவற்ற மற்றும் தமிழ் மக்களின் நலனில் முழுதாக அக்கறையற்ற ஒருவித வழியில் வழிநடத்தப் பட்டுள்ளார்கள்.  இந்த சம்பவங்களின் போக்குத்தான் முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் பகுதிகளில் மனிதாபிமான பேரழிவுக்கு வழிவகுத்தன என்பதை இது விளக்குகிறது.
எல்லாம் முற்றாக மாற்றப்பட்டது
இந்தப் பின்னணியில்தான் நான் மார்ச் 2015ல், சுமந்திரனுக்கு எதிராக உருவப்படம் மற்றும் கொடும்பாவி எரிக்கும் பிரச்சாரம் ஆபத்தான திருப்பத்தை எடுக்கும் என்றும் மற்றும் அதைக் கவனிக்காமல் விட்டாலpathmanathanோ அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டாலோ, அது உயிராபத்து விளைவிக்கக்கூடிய அதிக அழிவுத்திறனை அடையும் என்று எச்சரிக்கை செய்திருந்தேன். அப்போது வெளியிட்ட அச்சம் இப்போது உண்மையாக மாறியுள்ளது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் முதல்தடவையாக அதிகாரிகள், ஒரு ஜனநாயக பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்வதற்கு புலி மூலகங்கள் மேற்கொண்ட சதித்திட்டத்தை கண்டு பிடித்துள்ளார்கள். சுமந்திரன் மட்டுமல்ல ஆனால்  நல்லிணக்கம் மற்றும் சமாதானமான சக வாழ்வு என்பனவற்றுக்கு வருவதற்கு பாடுபடும் எல்லா ஜனநாயக தமிழ் அரசியல்வாதிகளும் இப்போது சாத்தியமான ஒரு ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். இது அரசியல் சூழ்நிலையை முற்றாக உருமாற்றியுள்ளது. ஈஸ்ட் தனது “ஈஸ்ட்டர் 1916” இல் எழுதியுள்ளது போல”எல்லாம் மாறிவிட்டது, முற்றாக மாறிவிட்டது”.
சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கம் மாறிவிட்ட இந்தக் காட்சியைப் பற்றி கவனிக்காமல் இல்லை. ஜனாதிபதி தலைமையேற்ற தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டம் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணசேன ஹெட்டியாராய்ச்சி தலைமைதாங்கிய புலனாய்வு சேவைகள் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் என்பனவற்றில் மேற்கொள்ளப்பட்ட நீடித்த விவாதங்களின் பின்னர், ஒரு புதிய பாதுகாப்பு ஏற்பாடு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரான எம்ஏ.சுமந்திரன் ஆகியோரின் பாதுகாப்புக்கு காவல்துறையின் விசேட செயலணி படைகள் (எஸ்.ரி.எப்) வழங்கப்படும், அதற்கு மேலதிகமாக ரி.என்.ஏயின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர்கள் ஆகியோருக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இது சமீப காலங்களாக புலம்பெயர் புலிகளை அடிவருடல் செய்வதாக குற்றம் சாட்டப்படும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் கூட செயற்படுத்தப்படும்.
அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு திட்டம் சம்பந்தன் மற்றும் சுமந்திரனுக்கு இந்த வார ஆரம்பத்திலேயே நடைமுறைப் படுத்தப்பட்டு விட்டது. ஜனவரி மாத நடுப்பகுதியில் மரணத்துக்கு குறி வைக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ஒரு கொலை வழக்கில் பிரதிவாதிகள் தரப்பில் வாதாடுவதற்கும் மற்றும் சில அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவும் வார நடுப்பகுதியில் வடக்கு குடாநாட்டுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்த பலரும் கொலைச் சதி முயற்சி கண்டுபிடிக்கப் பட்டதின் பின்னர் இவ்வளவு விரைவாக சுமந்திரன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவரது ஆதரவாளர்கள் பலரும் பாராளுமன்ற உறுப்பினரை யாழ்ப்பாணத்தில் கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்ததுடன் அவரது பாதுகாப்பு குறித்து கவலை வெளியிட்டார்கள். யாழ்ப்பாண உயர் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நீதிமன்றில் சுமந்திரனிடம், அவரைக் கொலை செய்வதற்கான திட்டம் அம்பலமான பிறகு, தான் இவ்வளவு விரைவில் சுமந்திரனை யாழ்ப்பாணத்தில் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார். கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள இளம் மாணவாகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியது தனது கடமை என சுமந்திரன் பதிலளித்தார். நீதிமன்ற சுற்றாடலிலும் அதைச் சுற்றியுள்ள சூழலிலும் சுமந்திரனுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கும்படி நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல் வழங்கினார்.
வெற்றி, மாறன் மற்றும் அமுதன்
ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதும் மற்றும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டதையும் இட்டு நிச்சயமாக திருப்தி அடைந்த போதிலும், இதில் மீந்திருக்கும் காரணம் என்னவென்றால், முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் வெளிநாட்டில் உள்ள புலிகளின் முகவர்களினால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதுதான்.கடந்த வார பத்தியில் குறிப்பிட்டதின்படி ரி.ஐ.டி அதிகாரிகள், அவுஸ்திரேலியாவில் உள்ள வெற்றி மற்றும் பிரான்சில் உள்ள மாறன் மற்றும் மலேசியாவில் உள்ள அமுதன் ஆகிய மூவரும் ஸ்ரீலங்காவில் உள்ள ஐந்து சந்தேக நபர்களுக்கும் நிதியுதவி மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க ஒத்துழைப்பு வழங்குவது என்பனவற்றுக்கு திட்டம் தீட்டியுள்ளார்கள் என்று கண்டுபிடித்துள்ளார்கள். ஸ்ரீலங்கா சட்ட அமலாக்க அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் உள்ள அவர்களது சக உத்தியோகத்தர்களுக்க எச்சரிக்கை செய்துள்ளார்கள். பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவில் விசாரணைகள் ஆரம்பமாகி நடந்து வருகின்றன ஆனால் மலேசிய பாதுகாப்பு வட்டாரங்கள் அமுதன் இப்போது அந்த நாட்டில் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையில் வட பகுதி ஸ்ரீலங்காவாசிகளுடன் அமுதன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்திய ‘சிம் அட்டை’ பிரேசிலை சேர்ந்ததாக உள்ளதாம்.
அமுதன் மாறன் மற்றும் வெற்றி ஆகியோர் ஆட்டுவித்த கைப்பாவைகளாக ஸ்ரீலங்காவில் கைது செய்யப்பட்ட இந்த முன்னாள் போராளிகள் ஐவரும் இருந்துள்ளார்கள், ஆனால் இந்த மூவரும் கூட ஒரு பெரிய புலிகள் வலையமைப்பின் ஒரு அங்கம். ஸ்ரீலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் உறுதியாக நம்புவது இந்த வலையமைப்பு நெடியவன் என அழைக்கப்படும் புலிச் செயற்பாட்டாளரின் தலைமையின் கீழ் உள்ளது என்று, அவரது உண்மையான பெயர் பேரின்பநாயகம் சிவபnorway ltteரன் ஆகும். 40 வயதான பேரின்பநாயகம் சிவபரன், யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கிலுள்ள வட்டுக்கோட்டை, சங்கரத்தையை சேர்ந்தவர். அவரது இயக்கப்பெயர் உயர்ந்த மனிதர் எனப் பொருள்படும் நெடியவன் ஆகும். நெடியவன் தனது 18ம் வயதில் 1994ல் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்தார். அவர் எல்.ரீ.ரீ.ஈ யினால் மேற்படிப்புக்காக ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அரசியல் விஞ்ஞ}னம் படித்தார் ஆனால் சிவபரன் மாஸ்கோவில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தெரிகிறது. சுவராஸ்யமாக, ரஷ்யாவில் நெடியவனின் படிப்புக்கான செலவு கேபி என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனினால் கையாளப்பட்டது, இந்த இளைஞனில் கேபி தனிப்பட்ட ஆர்வம் காட்டினார். கேபி, வெளிநாட்டு நிருவாகம், நிதி சேகரிப்பு மற்றும் கொள்வனவு என்பனவற்றுக்கு 2002க்கு முதல் பொறுப்பாக இருந்தார், நெடியவனுக்கு ஒழுங்காக பணம் அனுப்ப பிரான்சில் இருந்த ஒருவரைக் கண்டு பிடித்திருந்தார். ஓரவஞ்சனையாக இதே நெடியவன் பின்னாளில் கேபிக்கு எதிராக திரும்பினார்.
நெடியவன் எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் பிரிவில் செயலாற்றினார் மற்றும் முன்னாள் அரசியல் பிரிவு தலைவர் சுப்பையா பரமு தமிழ்செல்வனுடன் 2002 - 2003 காலப் பகுதியில் சில சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு துணையாகச் சென்றார். பின்னர் அவர் கஸ்ட்ரோ எனப்படும் வீரகத்தி மணிவண்ணின் தலைமையின் கீழிருந்த எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டு நிருவாகப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். நெடியவன் கஸ்ட்ரோவின் பொதுசனத் தொடர்பு பிரிவுக்கு பொறுப்பாக இருந்து, சமாதான நடவடிக்கை சமயத்தில் வன்னிக்கு வருகை தந்த அநேக வெளிநாட்டு செயற்பாட்டாளர்களடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். அப்போதுதான் நெடியவன் என்கிற சிவபரன் தனது வருங்கால மனைவியான சிவகௌரி சாந்தமோகனைச் சந்தித்தார். அவர் ஒரு நோர்வே பிரஜை. அவரது தந்தை , ரஞ்சன் லாலா என்கிற ஞ}னேந்திரமோகனின் சகோதரர். ஞ}னேந்திரமோகன் எல்.ரீ.ரீ.ஈயின் முன்னோடி உறப்பினர்களில் ஒருவரும் மற்றும் பிரபாரனின் நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் பாத்திரமான ஒருவர். ரஞ்சன் லாலா யாழ்ப்பாணத்தில் ஒரு உந்துருளியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இராணுவத்தால் சுடப்பட்டார்.
சிவபரன் மற்றும் சிவகௌரி
புலிகளின் ஆதரவாளர்களான பல திருமணம் செய்யாத பெண்கள், சமாதான நடவடிக்கை காலத்தில்  வன்னிக்கு வருகை தந்தபோது, அவர்கள் புலிப் போராளிகளான இளம் தமிழ் ஆண்களுடன் பழகியபோது, மன்தன் தொடுத்த ஐந்துவித மலர்க்கணைகளால் தாக்குண்டு தாங்க முடியாத காதல் வயமாகினார்கள். சிவபரன் மற்றும் சிவகௌரியும் காதலில் விழுந்தார்கள். ரஞ்சன் லாலாவின்மீது மிகவும் பிரியமாக இருந்த பிரபாகரன் இவர்களின் இணைப்புக்கு ஆதரவாக இருந்தார். அவர்களின் திருமணத்தின் பின்னர் சிவபரன் 2006ல் நோர்வே சென்றார். இந்த வருடங்களில் எல்.ரீ.ரீ.ஈ பல செயற்பாட்டாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியது. எல்.ரீ.ரீ.ஈயின் பல்வேறு துறைகளுக்குச் சொந்தமான இந்த அங்கத்தவர்கள் இந்த புது நாடுகளில் புலிச் செயற்பாட்டாளர்களாக இயங்கி வரலானார்கள். இந்த அங்கத்தவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் மற்றும் புலனாய்வு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.
நெடியவன் நோர்வேயில் வதிவுரிமை எடுத்தார். சிவகௌரியுடனான திருமண பந்தம் எல்.ரீ.ரீ.ஈயில் நெடியவனின் செல்வாக்குக்கு இன்னும் வலிமை சேர்த்தது. வெளிநாட்டு செயற்பாட்டாளர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு கஸ்ட்ரோ நெடியவனைப் பயன்படுத்திக் கொண்டார். போர் விரிவடைந்ததும் வன்னிக்கும் மற்றும் வெளிநாட்டிலுள்ள புலிகளுக்கும் இடையே தொடர்பு கொள்வது கடினமாக இருந்தது. அதனால் கஸ்ட்ரோ தனது சார்பாக வெளிநாட்டு பிரதிநிதி ஒருவரை நியமித்தார். இந்த நபர் எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டுக் கிளைகள் அனைத்துக்கும் ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தார். இந்த நபர் வேறுயாருமல்ல நெடியவன் என்கிற சிவரன்தான் அது.
ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டுக் கிளைகளுக்கு பொறுப்பாக இருந்த கேபி என்கிற செல்வராசா பத்மநாதன் திரும்பவும் எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்தபோது 2009 ஜனவரியில் சர்வதேச தொடர்புகளின் தலைவராக நியமிக்கப்பட்டார். பிரபாகரனின் அனுமதியுடன் கேபி வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈக்குள் தனது கட்டுப்பாட்டை மீளவும் நிறுவுவதற்கு இந்த பதவியை பயன்படுத்தினார். இது கஸ்ட்ரோவுக்கு சினமூட்டியது. கேபி உலகளாவிய புலித் தலைமை பொறுப்பை பெறுவதற்கு, கஸ்ட்ரோவின் அதிகாரத்துடன் நெடியவன் எதிர்ப்பைக் காட்டினார். இந்த எதிர்ப்பு மே 2009ல் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் அழிக்கப்பட்ட பின்னரும்கூட தொடர்ந்தது. தலைமைப் பதவியை தனது அனுபவ மூப்பைக் கணக்கிலெடுத்து கேபி அணிந்துகொண்ட அதேவேளை நெடியவன் மற்றும் அவரது விசுவாசிகள் அதை எதிர்க்கலானார்கள். 2009 ஆகஸ்ட்டில் மலேசியாவில் வைத்து கேபி கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ கட்டமைப்புகள்மீது நெடியவன் தனது பலமான கட்டுப்பாட்டை ஸ்தாபித்துக் கொண்டார்.
நெடியவனின் வலையமைப்பு பிரதானமாக கொண்டிருப்பது ஒரு காலத்து எல்.ரீ.ரீ.ஈ கிளைகள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் என்பனவற்றை. பெரும்பாலான மேற்கு நாடுகளில் எல்.ரீ.ரீ.ஈ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என தடைசெய்யப் பட்டுக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரிந்த பல புலிகளின் கிளைகள் இயங்காதவையாக மாறின அல்லது தங்களை புது அமைப்புக்களாக மாற்றிக்கொண்டன. புதிய முன்னணி அபை;புகளும்கூட நிறுவப்பட்டன. நெடியவன் குழுவும் கூட வெவ்வேறு நாடுகளில் உள்ள தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அமைப்புக்களைக் கொண்ட ஒரு வலையமைப்பை நிறுவிக் கொண்டது. இந்த அமைப்புகள் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள மக்கள் பேரவை அல்லது தேசிய பேரவை என அழைக்கப் பட்டன. இந்த அமைப்பிலுள்ளவர்கள் தம்மை  ஒருமட்டத்தில் ஜனநாயக அரசியல் செயற்பாட்டாளர்கள் என அழைத்துக் கொண்ட போதிலும் வேறு மட்டத்தில் நிழலான பல செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். இது எதனாலென்றால் இந்த அமைப்புகள் அடிப்படையில் எல்.ரீ.ரீ.ஈ கிளைகள், ஆனால் சட்டபூர்வமான அமைப்புகளாக பாசாங்கு செய்து கொண்டிருந்தன.
நெடியவன் வலையமைப்பு
இதன்படி நெடியவன் வலையமைப்பு; பாசாங்கு தனமான ஒன்றாக இருந்தபோதிலும் அதற்கு மாறாக அது வெளிப்படையானதோ அல்லது பொறுப்புடமையானதோ இல்லை. அதன் ஜனநாயக நம்பிக்கைகள் என அழைக்கப்படுபவவை அதிகம் விரும்பத் தகாதவையாக இருந்தன. நெடியவனை பின்பற்றுபவர்கள் வன்முறையாளர்களாக இருந்தார்கள். அதற்கு மேலும் நெடியவனின் வலையமைப்பு, அதன் செயற்பாட்டாளர்கள் பலர் நிழலானதும் சர்ச்சையானதுமான கடந்தகாலத்தை கொண்டிருப்பதால் அது இரகசியங்கள் மற்றும் தெளிவின்மை என்பனவற்றால் மறைக்கப் பட்டிருந்தது. வெவ்வேறு நாடுகளில் உள்ள அதன் முக்கிய அலுவலக உத்தியோகத்தர்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் அங்கத்தவர்களாகவோ அல்லது முன்னாள் அங்கத்தவர்களாக இருந்தபடியால் ஆயுதப் பயிற்சியும் அதேபோல போர்க்கள அனுபவத்தையும் கொண்டிருந்தார்கள். நெடியவன் குழுவினால் வெளியிடப்படும் அரசியல் அறிவிப்புகள், அனைத்துலக செயலகம் என அழைக்கப்படும் எல்.ரீ.ரீ.ஈ அலுவலகத்தில் ltte-diasproஇருந்து வெளியிடப்பட்டன.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா அதிகாரிகள் சில வருடங்களுக்கு முன்பு நெடியவனை தங்களிடம் கையளிக்குமாறு நோர்வேயிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். ஒஸ்லோ அதற்கு இணங்கவில்லை, ஆனால் நோர்வீஜியன் அதிகாரிகள் நெடியவனை நேர்காணல் செய்து நோர்வே மண்ணில் வாழும் வேளையில் அவர் வன்முறைகளில் ஈடுபடவோ அதை ஊக்கப்படுத்தவோ கூடாது என எச்சரிக்கை செய்திருந்தார்கள். அதன்பின் நெடியவன் ஒஸ்லோவில் இருந்து 500 கி.மீ அப்பால் உள்ள ஈட்ஸ்விக் என்ற பகுதிக்கு குடியேறிவிட்டார். அவர் தனது சுயவிபரங்களை அதிகம் வெளிப்படுத்தாமல் பராமரித்து வருவதுடன் பொதுவாக  அவரை யாரும் அணுக முடியர்தபடி வாழ்ந்து வருகிறார். எனினும் அவர் தனது முக்கிய துணைத் தலைவர்களுடன் நம்பிக்கையான தகவல் வழங்குபவர்கள் ஊடாக வாய்மொழியாக தொடர்பு கொண்டு கட்டளைகளை தெரிவித்து வருவதாக நம்பப்படுகிறது. எனினும் படுகொலை செய்யும்படி உத்தரவிடுவது போன்ற முக்கியமான பெரிய முடிவுகளை நெடியவன் தானே அறிவித்து வருவதாக சந்தேகிக்கப் படுகிறது.
ஸ்ரீலங்கா அரசாங்கம் மீண்டும் ஒருமுறை நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரனை, மேலதிக விசாரணை மற்றும் சாத்தியமான தண்டனைக்காக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற ஒரு முறைப்படியான வேண்டுகோளை நோர்வேயிடம்  விடுக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. சுமந்திரனது கொலை முயற்சிக்குப் பிறகு, ஸ்ரீலங்காவின் வழக்கு இப்போது முன்னரைவிட வலிமையானதாக மாறியுள்ளதாகத் தெரிகிறது. இந்த முறை ஒஸ்லோ கொழும்பின் வேண்டுகோளுக்கு இணங்குமா அல்லது இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கொழும்பிலுள்ள றோயல் நோர்வே தூதரகம், எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சி தொடர்பாகவும் மற்றும் ஸ்ரீலங்கா காவல்துறையினருடன் மேற்கொள்ளும் ஒத்துழைப்பு பற்றியும் ஒரு  பத்திரிகை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்தப் பத்திரிகை அறிக்கை இப்படித்தான் உள்ளது: - “பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன்மீது மேற்கொள்ளப் பட்டதாகச் சொல்லப்படும் கொலை முயற்சி தொடர்பாக வெளிவந்த சமீபத்தைய பத்திரிகை கட்டுரைகள் தொடர்பாக அறியத் தருவது. ஸ்ரீலங்கா செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்திருப்பதைத் தவிர நோர்வே தூதரகத்துக்கு இது தொடர்பாக வேறு தகவல்கள் எதுவும் கிட்டவில்லை. இது ஸ்ரீலங்கா காவல்துறையினால் கையாளப்பட வேண்டிய ஒரு சட்டப் பிரச்சினை என்றே நாம் கருதுகிறோம். பொதுவாக ஸ்ரீலங்கா காவல்துறை சர்வதேச ஒத்துழைப்பை கோரினால் அல்லது அதற்கான முயற்சியை ஆரம்பித்தால் அத்தகைய ஒத்துழைப்புக்காக நிறுவப்பட்ட சர்வதேச நடைமுறைகள் உள்ளன. தூதரகம் இது பற்றி மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை”.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-