கிழக்கு முதல்வரின் நிர்வாகப் பிரிவில் மின்னொழுக்குக் காரணமாக தீ ஏற்பட்டுள்ளது. இன்று (பெப்,14) 10.30 மணியளிவில் கட்டடத்தில் பொருத்தப்பட்ட ஏசியில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக தீப் பிடித்துள்ளது.
எனினும் அதனை அணைத்ததன் காரணமாக பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இத் தீ விபத்தில் ஆவணங்கள் சிறிதளவு தீப்பிடித்துள்ளதாகவும் குளிர்பதனப்படுத்தல் உட்பட ஆவணங்கள் சேகரித்து வைத்திருந்த அலுமாரி மற்றும் ஜன்னல்கள் தீக்கிரையாகியுள்ளது.