News Update :

Saturday, February 4, 2017

TamilLetter

பஷீர் சேகு தாவூத்தின் தவிசாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது


ஏ.எல்.றமீஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் இன்று  அவர் வகித்து வந்த தவிசாளர் பதவியிலிருந்து  இடை நிறுத்தப்பட்டுள்ளார்.

கட்சியின் உயர்பீட கூட்டம் இன்று மாலை தாறுஸலாத்தில் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கூடியது.இதன் போதே இத் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த சில நாட்களாக கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்து மக்களிடத்தில் குழப்பமான சூழ்நிலையை தோன்றிவித்த்தார் என்ற காரணமாகவே இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு; தவிசாளர் பஷீரை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்சியில் அவர் வகித்து வந்த தவிசாளர் பதவியில் இருந்து      இடை நிறுத்துவதற்கு கட்சியின் உயர்பீடம் ஏகமான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதன் பிரகாரம் கட்சியின் தவிசாளராக இதுவரை காலமும் பதவி வகித்து வந்த பஷீர் இன்று கட்சியின் எந்தவித செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாதோடு கட்சியின் அங்கத்தவர்கள் கட்சி சார்ந்த தொடர்புகளை பஷிரோடு வைத்திருக்க கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-