சப்ரி
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாலமுனை ஹிதாயா பெண்கள் கல்லுாரியின் வருடாந்த விளையாட்டு விழா இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
கல்லுாரியின் அதிபர் எம்.ஏ.ஹனிபா தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல்.தவம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன் போது விளையாட்டில் பல சாதனைகளை படைத்த மாணவிகளுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் மாகாண அமைச்சர் ஆகியோர் பரிசில்களை வழங்கி வைத்தனர்