News Update :

Sunday, February 19, 2017

TamilLetter

அதாஉல்லாவினதும் பஷீரினதும் பகடியை கேளுங்கள்




ஏ.எல்.சபீர்
 முஸ்லிம் காங்கிரஸ் கிளை செயலாளர்

முஸ்லிம் மக்கள் மத்தியில் என்ன கூட்டமைப்பு வந்தாலும் மூன்று மாதத்திற்கு பிறகு அது காணமல் போய்விடும் அதற்கு சிறந்த உதாரணமே கிழக்கின் எழுச்சி கோசம்

இன்று மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களும் கட்சியினால் துரத்தப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாணத்தான் தலைமை தாங்க ஒரு கட்சி தேவையெனக் கூறி அங்கும் இங்கும் தொங்கோட்டம் ஒடுகின்றனர்.

கட்சியால் துரத்தப்பட்ட பஷீர் சேகுதாவூத் மக்களால் துரத்தப்பட்ட அதாஉல்லாவிடம் தஞ்சம் புகுந்துள்ளார்.

அதாஉல்லா சுமார் 15 ஆண்டுகள் உச்ச அதிகாரத்தில் இருக்கும் போதே மக்களின் மனங்களை வெல்ல முடியாதவர் இப்ப தோல்வியடைந்து சுருண்டு படுக்கும் போது மக்களின் தேவையை இவர் பெற்றுக் கொடுக்கப் போறார்.

பஷீர் சேகுதாவூத் தனது சொந்த ஊரிலே நூறு வாக்குகளை பெற முடியாதவர் கிழக்கு மாகாண மக்களுக்கு தலைமை தாங்க போறார்.

சீடி சீடி என்று மாதக் கணக்கில் கத்தினார் இப்போ அந்த சீடி பூசனம் பிடித்து போய்விட்டது என ஆறுதல் சொல்கிறார்.

ஹஸனலிக்கு செயலாளர் தேவையில்லை எம்.பிதான் தேவை அதைப் பெற்றுத்தாங்கடா என்று அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு நெருக்கமானவர்களிடம் ரகசியமாக தொலை பேசியில் சொல்கிறார்.

ஹஸனலி பாவம் கடைசிக் காலத்தில் எம்பியாவது கொடுப்போம் அவரை வரச் சொல்லுங்கள் என்று ஹக்கீம் சொல்ல மனிஷன் உஷாராகி கிளம்பும் போது ஹஸனலியை தடுத்து நிறுத்துகிறார்கள் ஒரு கூட்டம் ஹஸனலியும் ஒன்றுமே விளங்காமல் உளறித் திரிகிறார்.

இதுக்கெல்லாம் மேலாக இதற்கு முன் படு தோல்வியடைந்து ஊரை விட்டுச் சென்ற வேதாந்தி சேகு இஸ்ஸதீனும் இவர்களுக்கு ஆலேசனை வழங்குகிறார் எப்படி  உலகம்

இன்னும் பாருங்கள் நாளாக நாளாக மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒவ்வொறுத்தனும் இந்த கட்சியில இணையப் போறன் 
இதற்கெல்லாம் முடிவுகட்ட ஒரு தேர்தல் வரனும் அப்ப புரியும் இவர்கள் எடுத்த வாக்கு இரண்டாயிரத்தையும் தாண்டுமா என்று 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-