News Update :

Thursday, February 16, 2017

TamilLetter

மக்களின் கோரிக்கையை அலட்சியம் செய்யும் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் 

இன்று மிகவும் சூடான கால நிலை இருந்தும் நீர் எங்கிருந்து வந்தது. 
இந்த பதிவை இடுவதுபற்றி யாரும் வருந்த தேவை இல்லை. இது பற்றி ஏற்கனவே உரியவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அக். ஆயிஷா மகளிர் கல்லூரி பின்வீதியில் சரியாக அப்பாடசாலியின் பின் வாயிலருகே இப்படியான ஒரு நிலை. காரணம், இங்கே தெரிகின்ற நீரின் மறுபுறத்தில் பாதையை தோண்டி நீர் இணைப்பினை பெற அனுமதி கொடுத்தவர்கள் காரியம் முடிந்தபின் மீண்டும் சரியாக செப்பனிடப்பட்டதா  என கவனிக்கவில்லை.

இது ஒரு அண்மையில் இடப்பட்ட கொங்கிரீட் பாதை.நீர் இணைப்பின் பின் அந்த இடத்தை தாண்டி நீர் வடிவதில்லை. ஏற்கனவே பாடசாலையின் பின்பகுதிவீதியில் மழை நீர் தேங்கி வடியாமல் இருப்பது பற்றி அக்.3 ஆம் குறிச்சி கிராம அபிவிருத்தி சங்கத்தில் என்னால்பிரஸ்தாபிக்கப்பட்டது.அதன் தலைவர் அப்துல் கபூர் மாநகர ஆணையாளரை தொடர்புகொண்டபோது மழை காலத்தில் அறிவிக்கும்படி கூறியதனால் அவ்வாறான ஒரு நாள் அறிவித்து அவரின் பிரதி ஒருவர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் ஆகியோர் வந்து அவதானித்தபின் உரிய நடவடிக்கைக்காக பொறியியலாளரிடம் பேசி ஒரு முடிவுக்கு வருவதாக சென்றும் எதுவும் நடக்கவில்லை.

அதை அடுத்து தற்போது பாடசாலை உள்ளே நடைபெறும் கட்டிட வேலை காரணமாக தூண்போடுவதற்காக குழி தோண்டி வரும் சுரியுடன் சேர்ந்த நீரை இறைத்து விடுவதால் நீர் வெளியே வந்து ஏற்கனவே வடியாமல் இருந்த இடத்தில் நீர் இவ்வாறு தேங்கி நிற்கிறது.காலை வேளையில் வெள்ளை சப்பாத்து அணிந்து வெண்புறாக்களாக கூட்டுக்குள் சேர வரவும் மாணவிகள் இந்த சேரில் நனைந்தவர்களாகவே உல் செல்லுகின்றனர். பாடசாலை கலைந்ததும் சில மாணவிகளை அழைத்துச்செல்ல வரும் பெற்றோர் பின் வாயிலடியில் காத்துக்கொண்டிருக்கையில் இது பற்றி முறை இடுகின்றனர். 

இது பற்றி குறிப்பிட்ட கொந்தராத்துக்காரரின் பிரதி நிதியிடம் இருமுறை கூறப்பட்டது. பாடசாலை அதிபருக்கு இருமுறை தொலைபேசி மூலம் கூறப்பட்டது. நிர்வாகம் கொந்தராத்துப்பிரதிநிதியுடன்இதனை பார்வையிட இவ்விடம் வந்த பொது இதன் பிரச்சினையை அறிந்த பின் பொலித்தீன் குழாய் பொருத்தி நீரை 2/3 பொதுவிதியின் வடிகானுக்கு அனுப்ப பேசப்பட்டது அனால் எதுவும் நடக்கவில்லை.அனால் இவ்வாயிலை பாவிக்கவேண்டாம் என பாடசாலை கதவில் இன்று ஒட்டப்பட்டிருக்கிறது

. மழை நீர் என்றாலும் பரவாயில்லை. இது சேறு சூரி கலந்த சுரித்தண்ணீர். என்னால் முடியுமான அளவுக்கு முயட்சி செய்திருக்கிறேன். இன்றைய நிலை மிக மோசமாக இருக்கிறது.நடந்து செல்லுகின்ற தாய்மார்கள் இதனை எண்னிடம் முறையிட்டார்கள். இந்த புகைப்படத்தை கொண்டுபோய் அதிகாரிகளிடம் காண்பிக்க எனக்கு நேரம் போதாது. அதனால்தான் இந்தப்பதிவு. இதற்கு தீர்வு தேவை என நினைத்தால் இப்பாடசாலையின் பின் வாயிலை பயன்படுத்தும் மாணவிகள் நலன் கருதி யார் சரி செய்வர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-