News Update :

Sunday, February 12, 2017

TamilLetter

அதாஉல்லாவை விலக்கியது சரி என்றால் இவர்களையும் விலக்கியதும் சரிதானே -ஏ.எல்.நஸார்-

ஏ.எல்.நஸார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்று காலம் தொட்டு தனிநபர் சுயநலன்களுக்காக சமூகத்தையும் கட்சியையும் காட்டிக் கொடுத்தவர்களின் பெயர்ப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

ஆரம்பத்தில் கட்சியின் ஸ்தாபகத் தலைவரின் மனைவியை கட்சியை விட்டு துரத்துவதற்கு அதாஉல்லா தலைமையிலான ஹரீஸ் அன்வர் இஸ்மாயில்  பொத்துவில் அஸிஸ்; உட்பட ஏராளமானவர்கள் ஒன்று கூடி பேரியல் அம்மையாரை துரத்தினர்.

அதன் பிற்பாடு அதாஉல்லா,ஹரீஸ்,அன்வர் இஸ்மாயில் இன்னும் பலபேரை கட்சியை விட்டு விலக்குவதற்கு ஹஸனலி.  பஷீர்.  பாயீஸ். என ஒரு கூட்டம் ஹக்கிமுக்கு பின்னால் நின்றது.

அடுத்த கட்டமாக ரிஷாட் பதியுதீன்அமிரலி>நஜீப் ஏ.மஜீத் என ஒரு சாரார் ஹக்கீம் பிழை என சொன்னார்கள் இவர்களையும் கட்சியிலிருந்து இடை நிறுத்துவதற்கும் ரவூப் ஹக்கீம் சரி என்று சொன்னவர்களும் பஷீ;ரும்  ஹஸனலியும்தான்.
காலச் சுழற்சியினால் இப் பொழுது பஷீர் ஹஸனலி துரத்தப்படுகின்றார்கள் இதற்கு பின்னால் இன்னுமொறு சாரார் உள்ளனர். 

சுதிகாரர்களுக்கெல்லாம் சதிகாரன் இறைவன் என்பதுபோல் இந்த சதிகாரர்கள் அவர்கள் விரித்த வலையில் சிக்குண்டுள்ளனர்.இதில் கவலைப்படுவதற்கு ஒன்றுமேயில்லை

முன்பு குறிப்பிட்டவர்களை தலைவரோடு இணைந்து சதி செய்து வெளியேற்றி தவிசாளர் மற்றும் செயலாளர் பதவிகளை; அடைந்தவர்கள் இந்த பஷீரும் ஹஸனலியும்தான்.

இவர்கள்  தனக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதற்காக சுமார் 16 வருடங்களுக்கு பிற்பாடு ஹக்கீம் பிழை என மக்கள் மத்தியில் சொல்கின்றீர்களே எவ்வளவு கேவலமானது.

கட்சிக்குள் இருந்து கொண்டு மற்றவர்களுக்கு சதிகளை செய்தது நீங்கள்தான் அதற்கான தண்டனைதான் இன்று இறைவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-