News Update :

Sunday, February 12, 2017

TamilLetter

எம்.எல்.ஏக்களை விடுதலை செய்ய: வேலூர் எம்.பி. அதிரடி!


அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சசிகலா காஞ்சிபுரம் அருகே உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளவர்களை நாங்கள் பேரணியாக சென்று விடுதலை செய்வோம் என்று வேலூர் எம்.பி. செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: முதல்வர் பன்னீர்செல்வம் மிகவும் சிறப்பாக தமிழகத்தில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கின்றார். அவரது நடவடிக்கையை பார்த்து எதிர்க்கட்சியினர் கூட முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சசிகலா முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக பன்னீர்செல்வத்திடம் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கியுள்ளார். அது மட்டும் இல்லாமல் எம்.எல்.ஏக்கள் அனைவரையும் ரிசாட்டில் அடைத்து வைத்து தன்னை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மிரட்டி வருகின்றார்.
எனவே, இன்று அனைத்து எம்.எல்.ஏக்களையும் விடுவிக்கவில்லை என்றால் வேலூரில் இருந்து அதிமுக தொண்டர்கள் அனைவரும் பேரணியாக சென்று எம்.எல்.ஏக்கள் அனைவரையும் விடுதலை செய்து அழைத்து வருவோம். இவ்வாறு அவர் பேசினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-