News Update :

Wednesday, February 15, 2017

TamilLetter

அதாஉல்லாவுக்கு தூது அனுப்பினார் சேகு இஸ்ஸதீன்


 எஸ்.எல்  அக்ரம் 

கத்தியை விட கூர்மையானது பிளேட் ஆனால் பிளேட்டினால் ஒரே ஒரு வேலையைத்தான் செய்ய முடியும் அதே போல் ஒரு குறிப்பிட்ட சிலர் தன்னை பெரும் அறிவு பொக்கிஷமாக நினைத்துக் கொண்டு எதை எதையோ செய்ய முற்படுகின்றனர் இறுதியில் பிளேட்டின் கதையாகி விடுகின்றனர்.

பல கட்சிகள்,பல தலைவர்கள்  எல்லாவற்றையும் பார்த்தாச்சி எதுவும் சாத்தியப்படவில்லை வருடங்கள் இன்னும் எத்தனை கடந்தாலும் பரவாயில்லை அதிகாரத்தை நோக்கி உயிர் பிரியும் வரை பயணிப்பேன் அதுதான் எனது; கொள்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் செயலாளர் மற்றும் தவிசாளர் பிரச்சினை உக்கிரமடைந்த வேளையில் மலையில் தூங்கிக் கொண்டிருந்த வேதாந்தியின் கண்கள் விழிக்கத் தொடங்கின.

கோழும்புக்கு விரைந்தார் வேதாந்தி  முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் வீட்டில் தலைமைக்கு அறிவுரை எப்படி தலைவரை பஷீர் குற்றம் சுமத்துவது உடனடியாக கட்சியை விட்டு இடைநிறுத்த வேண்டும் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கோம் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்றார் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வேதாந்தி விடும் மூச்சுக் காற்றுக் கூட எதற்காக விடுகிறார் என்பது நன்றாகவே தெரியும் அது தலைவருக்கு தெரிந்து விட்டது என்பதை வேதாந்தியும் உணராமல் இல்லை பிறகு என்ன?

மறுநாள் காலை பிரதியமைச்சர் அமிரலியின் வீட்டில் காலை உணவோடு ஒரு கலந்துரையாடல முழு நிலவில் ஒரு கலை விழா முடிந்த கையோடு மூதூரில் ஒரு சுற்றுலா ஒன்றுமே நடக்கவில்லை அமைச்சர் ரிஷாட்டுக்கு ஒரே தலையிடி நிகழ்வு முடியும் வரை அவ்வளவு புத்திமதி

அமைச்சர் ரிஷாட்டும் புரியாத புதிர் வேதாந்தி காலத்தை காக்க மாட்டார் மீண்டும் எண்ணப் பறவை இந்த வயதான காலத்தில் இவ்வளவு தூரம் பயணிப்பதா தனக்குள் ஓர கேள்வி விடக் கூடாது சொந்த ஊரிலே ஆட்டையப் போடுவோம்.

தூது அனுப்புகிறார் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு இணைந்து செயற்படுவோம் நீங்கள் எனக்கு செய்த அநியானம் என்னோடு போய்விட்டது ஹக்கீம் உங்களுக்கு செய்த அநியானம் இந்த சமூகத்திற்கானது எனவே இணைவோம் எதிரிகளை வீழ்த்துவோம் என வேதாந்தியின் வேத வாக்கு அதாஉல்லாவை நோக்கி என்ன செய்யப் போகிறார் அதாஉல்லா?

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-