News Update :

Thursday, February 2, 2017

TamilLetter

அமைச்சர் ரவூப் ஹக்கீம் சேகு இஸ்ஸதீன் இரகசிய சந்திப்பு

ஏ.எல்.நஸார்-அக்கரைப்பற்று

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் ஆகியோர் இரகசியமான முறையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

சேகு இஸ்ஸதீன் அண்மைக் காலமாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் செயற்பாடுகளுக்கு எதிராக தனது கருத்துக்களை கூறிவரும் வேளையில் இச் சந்திப்பு இடம் பெற்றுள்ளதால் அரசியல் மட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரினால் முன் வைக்கப்படும்; குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் உடனடியாக தவிசாளரை கட்சியை விட்டு விலக்குவதன் மூலமே இச் சூழலுக்கு பொருத்தமானதாக அமையுமென சேகு இஸ்ஸதீனால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

 இதே வேளை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மனப் பூர்வமாக சேகு இஸ்ஸதீன் இணைய வேண்டுமென கட்சியின் தலைவரால் கோரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-