குல்ஸான்
தனது கருத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தைரியமாக கட்சியின் நலன் கருதி முதலில் குரல் கொடுத்தவர் மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களே என்று இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யு.கே.ஜெபீர் மௌலவி தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத்தை கட்சியிலிருந்து இடை நிறுத்தியது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களுக்கான பேரியக்கம் இந்த இயக்கத்தை தனி நபர்களின் சுகபோக வாழ்க்கைக்காக அடமானம் வைக்க முடியாது.அந்த வகையில் பஷீர் சேகு தாவூத்தின் நடவடிக்கைகள் மனித குலத்துக்கே அசிங்கமானது.
தான் பாராளுமன்ற பதவியை அடைவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்த கேவலம் கெட்ட ஒருத்தர் எப்படி நமது சமூகத்தின் நலனைப்பற்றி அங்கலாய்ப்பது.
பஷீர் கட்சிக்கு எதிராகவும் தலைமைக்கு எதிராகவும் சதித்திட்டங்களை அரங்கேற்றி வந்த வேளைகளில் வாய்மூடி மௌனியாக பல உயர்பீட உறுப்பினர்கள் அன்று தொட்டு இன்றுவரை இருந்து வந்தது வேதனையளிக்கின்றது .
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து கட்சியையும் தலைமையும் சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டுமென்பதற்காக துணிந்து நின்று தைரியமாக பஷீருக்கு எதிராக கருத்துக்களை முதலில் வெளியிட்டது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்தான் அதன் பிற்பாடுதான் மற்றவர்களும் பஷிரை கண்டிக்க ஆரம்பித்தனர்.
மாகாண சபை உறுப்பினர் தவம் போன்ற ஆளுமைமிக்க இளைஞர்கள் நமது கட்சிக்கு இன்னும் அதிகமாக தேவைப்படுகின்றனர்.
எனவே எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ள பேராளர் மாநாட்டிற்கு பிற்பாடு கட்சி புதுப்பொழிவுடன் வீறு நடைபெறப் போகுது
ஆகவே நமது தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமைக்கு வலுச்சேர்ப்பதற்கு கிழக்கு மாகாண இளைஞர்கள் அணிதிரள வேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன்