News Update :

Thursday, February 2, 2017

TamilLetter

தலைவரின் பக்கம் யார்: தவிசாளரின் பக்கம் யார்? இனம் காட்டியது இத் தருணம்

அப்துல் காதர்-ஏறாவுர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு எதிராக தவிசாளர் பஷீர் சேகு தாவூதினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலர் மௌனம் காத்து வருவதாக கூறப்படுகின்றது.

உயர்பீட உறுப்பினர்களின் இந்த மௌனம் தலைவருக்கு எதிராகவும் தவிசாளருக்கு ஆதரவாகவும் இருக்கின்றதா என்ற கேள்வி கட்சி போராளிகள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
அத்தோடு குறிப்பிட்ட சில உயர்பீட உறுப்பினர்கள் தலைவரும் தவிசாளரும் நன்றாக முட்டி மோதட்டும்.அவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் போது எப்படி எங்களோடு நடந்தார்கள் அதற்கான தண்டனைதான் இது என கூறுகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தியில் தாம் மாட்டி விடக் கூடாது என்று இரண்டு பேருக்கும் தன்னை நல்லவனாக அடையாளம் காட்டுகின்றனர் இன்னும் ஓர் சாரார்.

இப்படியிருக்கும் நிலையில் கட்சியையும் தலைமையும் பாதுகாப்பது நமது சமூகத்திற்கு மிகவும் அவசியமென சில உயர்பீட உறுப்பினர்கள் வெளிப்படையாகவே தவிசாளருக்கு எதிரான கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சர் நஸீர் அகமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்,எஸ்.எம்.பளீல் பீ.ஏ.,பிரதியமைச்சர் ஹரீஸ்,நிஸாம் காரியப்பர் ஆகியோர் தலைவருக்கு ஆதரவாக தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

பிரதியமைச்சர் பைஸல் காசீம்,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர்,அலி சாஹீர் மௌலானா, மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்,மாகாண சபை உறுப்பினர்களான ஜவாத்,ஆரீப் சம்சுதீன்,மாஹீர்,சிப்லி பாறூக்,ஏ.ஆர்.எம்.அன்வர் ஆகியோர் எதுவித கருத்துக்களையும் தெரிவிக்காமல் நழுவிக் கொண்டு இருப்பதனால் இவர்களைப் பற்றிய சீடிக்களும் தவிசாளரிடம் உள்ளதா? என மக்கள் சந்தேகப்படுகின்றனர்.

எது எப்படியோ தலைவரின் பக்கம் யார் யார் உள்ளார்கள் என்பதை இத் தருணம் புடம் போட்டு காட்டி விட்டது.

இச் செய்தி பார்த்தவுடன் நிறைய உயர்பீட உறுப்பினர்கள் தலைவருக்கு ஆதரவாக கருத்துக்களை ; தெரிவிப்பார்கள் என்பது மட்டும் உறுதி

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-