News Update :

Wednesday, February 8, 2017

TamilLetter

மணல் லாரியை முந்திச் சென்றபோது விபத்து: தந்தை, இரு மகள்கள் பலி



8 மற்றும் 5 வயது மதிக்கத்தக்க தனது இரண்டு மகள்களை ஆசை ஆசையாக பள்ளியிலிருந்து  மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்த தந்தை ஒருவர்,  மணல்  லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து விழுந்ததால்,  அம்மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி  பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
நெஞ்சை உலுக்கும் இந்தச் சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் கம்போங் பாலிக் புக்கிட், தெலுக் மாஸ் எனுமிடத்தில் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் முகமது லாசி முகமது தாஹேர் (வயது 35) மற்றும் அவரது இரு மகள்களான நுர் பால்கிசா அமானி மற்றும் நுர்ஃபாரிசா அமானினா ஆகியோர் உடலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர். 
எனினும்,  இம்மூவர் பயணித்த மோட்டார் சைக்கிளை  மோதிய மணல் லாரி ஓட்டுனருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தில் பலியானவர்களின் சடலங்கள் சவப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-