News Update :

Tuesday, February 7, 2017

TamilLetter

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் அதிரடியாக நீக்கம்



அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்க அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். பன்னீர்செல்வத்திற்கு பதிலாக அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மெரீனாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியின் முன்னிலையில் நேற்றிரவு 40 நிமிடங்களுக்கு மேல் மௌன அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு பன்னீர்செல்வத்தின் அதிரடியான பேட்டியை தொடர்ந்து போயஸ் கார்டனில் அமைச்சர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-