எம்.ரீ. ஹைதர் அலி
கிழக்கு மாகாணத்தில் நிலவும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரமான கௌரவ. ரவூப் ஹக்கீம் தலைமையில் 2017.02.23ஆந்திகதி-வியாழக்கி ழமை (இன்று) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண காணி அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், மத்திய அரசாங்கத்தின் காணி ஆணையாளர், வணபரிபாலன ஆணையாளர் நாயகம், புதை பொருள் ஆராட்சி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மற்றும் மத்திய காணி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.