News Update :

Thursday, February 2, 2017

TamilLetter

வேலை போய்விடும் என்ற அச்சத்தில் குழந்தையை அடுப்பில் வைத்து கொன்ற தாய்!



பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அடுப்பில்  வைத்த கொடூர சம்பவம் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.  
ரஷ்யாவின் கெமெரேவோ பிராந்தியத்திலுள்ள, பிலகோவெசாங்க பகுதியில் வசிக்கும் பெண் தான் வேலை செய்யும் இடத்திலிருந்து மறைத்து பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். 
இவருக்கும், மீன் பிடிக்கும் தொழிலில் இருக்கும், இவருடைய கணவருக்கும் ஏற்கெனவே மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  இந்நிலையில் தற்போது நான்காவது  குழந்தை பிறந்தது தெரிந்து வேலை போய் விடுமோ என்ற அச்சத்தில் கணவர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், பச்சிளம் குழந்தையை எரிந்துக்கொண்டிருக்கும் அடுப்பில் வீசி கொலை செய்துள்ளார். 
மீன்பிடி தொழிலுக்குச் சென்று திரும்பிய கணவர், குழந்தை கொல்லப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அடுப்பில் கருகிய நிலையில் கிடந்த குழந்தையை மீட்ட அவர், மனைவியைச் சரமாரியாகத் தாக்கி போலீசில் ஒப்படைத்தார். 
இதனையடுத்து, பெற்ற குழந்தை என்றும் பாராமல், அடுப்பில் வைத்து எரித்துக் கொன்ற தாய் தற்போது மனநலக் காப்பகத்தில் விடப்பட்டுள்ளார். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-