சிகிச்சையின் பின்னர், வைத்தியர் நோயாளியுடன் ஒரு மணித்தியாலத்தை செலவிடவேண்டும் என்றும் மற்றும் நோயாளர்கள் தொடர்பான வைத்திய பரிசோதனைகளின் போது வைத்தியர் ஒருவர் நோயாளியை 10 நிமிடங்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சகல வைத்தியர்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதேவேளை நோயாளரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாத தொகையே அறவிடப்படவேண்டும். விசேடமாக அரச விசேட வைத்திய நிபுணர்களுக்காக இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் நோயாளர்களின் உரிமை மற்றும் வைத்தியர்களின் சேவை தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, நோயாளர்களின் உரிமைக்காக எதிர்காலத்தில் மேலும் பல சட்டங்களைக் கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
எதிர்வரும் ஜுலை மாதத்தில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுமக்கள் நலன் தொடர்பான சர்வதேச கண்காட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்து வைப்பதற்காக சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் உரையாற்றுகையில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஆயுர்வேத கண்காட்சி மற்றும் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது இதற்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.